பக்கம்:வாழும் தமிழ்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப்பின் சரித்திரம் 147

என்றும், தும்மைச் சேர்ந்தவன் என்ற பொருளில் நுமன் என்றும், எம்மைச் சேர்ந்தவனென்று குறிக்க எமன் என்றும் சொல்வது தமிழ் மரபு. இந்த வரிசையில் கமர், தமள், கமர், கமள், நூமர், நுமள், எமர், எமள் என்ற வார்த்தைகள் வேறு இருக் கின்றன. இன்னும் தம்மான், நம்மான், நும்மான், எம்மான் முதலியனவும் உள்ளன. த ந நூ எ என்ற ஆரம்பமும், ன், ர், ள் என்ற இறுதியும் உடைய இந்தச் சொற்கள் விளிவேற்றுமையைக் கொள்ளாதவை என்று தொல்காப்பியர் ஒரு சூக்திரம் செய்திருக்கிரு.ர். அவர் காலத்தில் அந்த வார்த்தைகள் விளி வேற்றுமையை ஏற்பதில்லே என்று அதனால் தெரிகிறது.

ஞல் நாளடைவில் வழக்கம் மாறியது. "எம்மானே தோன்றிய்ை’ என்று கவிஞர் பாடினர். எம்மான் என்பது தொல்காப்பியர் காலத்தில் விளி பெருது. சீவகசிந்தாமணியில் விளி பெற்றுவிட்டது. கமர் என்பது தொல்காப்பியருக்கு விளிபெருப் பெயர். பிற்காலத்திலோ, கமர்காள்', 'கமரங்காள் என்று. விளிபெற்று விட்டது. இப்படியே தமர்காள், எமர்காள் என்றெல்லாம் வந்துவிட்டன. கொல்காப் பியர் விலக்கின வார்த்தைகளில் துவில் ஆரம்பிப்பவை அல்லாத மற்ற எல்லாம் இப்படி மாறவே, காலத் துக்கு ஏற்றபடி இலக்கணம் செய்ய வேண்டியது அவசியம் ஆயிற்று. பிற்காலத்தில் வந்த கன்னூலார் இதைக் கவனித்தார். தொல்காப்பியர் இதை உணர்ந்துகொள்ளவில்லே என்று அவர் முன்புள் ளோரைக் குறை கூறவில்லை. ‘இலக்கணத்துக்கு. விரோதம் இது: கவறு என்று பின்வந்தவர்களே வெருட்டவும் இல்லே. உயிருள்ள மொழியில் இப்படி உண்டாகும் மாறுபாடுகள் அதன் வளர்ச்சியைக் குறிக்கும் அடையாளங்கள் என்று அவர் அறிந்தவர். ஆகவ்ே, மற்றவற்றை விட்டுவிட்டு, 'து என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/156&oldid=646259" இலிருந்து மீள்விக்கப்பட்டது