பக்கம்:வாழும் தமிழ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - வாழும் தமிழ்

வரிசையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். தம்முடைய நாட்டின் பால் பற்றுடையவர்கள் தமிழர். அதனல் தான் ஒரு காரணம்பற்றி வகைப்படுத்தும் பெயர்களில் முதலாவதாகத் தொல்காப்பியர் நிலப்பெயர் என்பதை வைத்திருக்கிரு.ர். இன்ன காட்டினர் என்று வழங்கும் வழக்கம் தமிழரிடையே இருந்தது என்பதோடு, அத்தகைய வழக்கம் சிறப்பை உண்டாக்கியது. என்பதும் இதல்ை அறியக் கிடக்கிறது.

அடுத்தபடி வருவது குடிப் பெயர்; சேரமான், மலேயமான், பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் என்பவை குடிப்பெயர்களுக்கு உதாரணம். தத்தம் குடிச் சிறப்பை நன்கு உணர்ந்து வாழ்ந்தவர் தமிழர். அக்குடிக்குப் புகழ் காட்டி இகழ்ச்சி வராமற். காப்பதைக் கடமையாகக்கொண் டிருந்தனர். திருக் குறள் முதலிய பழைய நூல்கள் குடிப்பெருமையைப் பற்றி வற்புறுத்திச் சொல்கின்றன.

இவ்விரண்டும் இடத்தாலும் குலத்தாலும் அமைந்த பிரிவுகள். இனிச் செய்கையால் அமைந்த பிரிவுகள் வருகின்றன. அரசாட்சி செய்தல், ஊர் காவல், அறச் செயல் புரிதல் முதலிய மக்கட் சமுதா யத்துக்கே பொதுவான காரியங்களேக் தனித்தனி மனிதன் செய்ய முடியாது. பலர் சேர்ந்த தொகுதி வேண்டும். அந்தத் தொகுதிகளும் வெவ்வேறு பொறுப்புக்கு ஏற்ற வேறுபாட்டை உடையனவாக வேண்டும். இப்போது அரசியலில் ஒவ்வொரு வகையான வேலேக்கும் தனித்தனிப் பகுதி இருக்கிறது. இவ்வாறு அமையும் தொகுதியை இலாகா என்று இப்போது வழங்குகிருர்கள் சில சமயங்களில் சிறப் பாகச் சில காரியங்களேச் செய்வதற்கு அப்போதைக்குச் சில அறிஞரைக் கூட்டி ஒரு குழு நியமிப்பார்கள்.

பழங்காலத்தில் அரசியலிலும் பிற நிர்வாக காரியங்களிலும் இவ்வாறு குழுக்களே அமைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/165&oldid=646275" இலிருந்து மீள்விக்கப்பட்டது