பக்கம்:வாழும் தமிழ்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(182 வாழும் தமிழ்

பண்டமோ, பொம்மையோ என்றுதான் நினைக்கும். கோபம் என்பது சுட்டிக் காட்டுவதற்குரிய பொருள் அன்று.

குழந்தையின் தங்தை கோபித்துக் கொள்கிரு.ர். குழந்தைக்கு அப்போது கோபத்தின் மெய்ப்பாடுகள் தெரிகின்றன. அவருடைய அங்க அ ைச வு, படபடப்பு, இரைச்சல் இத்தனையும் சேர்ந்து கோபம் என்ற குணத்தின் விளைவுகளாக இருக்கின்றன. ஆகவே, கோபம் என்று அதற்குத்_தெரியும்போது, அந்தச் சொல்லின் பொருளே, இந்த விளைவுகளே நினைத்துக் கொண்டே அது உணர்ந்து கொள்கிறது. கை கால்களே அசைத்து ஆட்டுவதில் கோபம் இருக்கிறது; ஆனால் அதுவே கோ. ப ம் அன்று. இரைந்து பேசுவதில் கோபம் உண்டு; ஆல்ை அதையே கோபம் என்று சொல்லக் கூடாது. கோபத்துக்கு அறிகுறியான செயல்களில் அவையும் சேர்ந்தவை.

கண்ணுலும் காதாலும் உணர்ந்த மெய்ப்பாடு களைக் கொண்டு, கோயம் என்ற குணத்தைக் கருத்தால் உணர்கிருேம். அது கருத்துப் பொருள் (Abstract) என்று சொல்லப்படும்.

கருத்துப் பொருளாகிய கோ. ப ம், அன்பு, பொருமை, சோம்பல் முதலிய, குணங்கள் மனித ளிைடத்திலே காணப்படுவன. அவற்றைக் குழங்தை நாளடைவில்தான் தெரிந்து கொள்கிறது. வளர வளர அதன் அறிவும் வளர்கிறது. அதனல் கருத்துப் பொருள்களையும் அவற்றிற்குரிய சொற்களையும் அதிகமாகத் .ெ த ரிங் து கொள்கிறது. கருத்துப் பொருள்களில் மிகமிக நுணுகிய பல உண்டு. உணர்ச்சி என்பதை மிக நுணுகிய கருத்துப்பொருள் என்று சொல்லவேண்டும். அதன் உருவத்தை இன்னதுதான் என்று சொல்லிவிட முடியாது. இன்பம், துன்பம் என்றவையும் அத்தகையனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/191&oldid=646333" இலிருந்து மீள்விக்கப்பட்டது