பக்கம்:வாழும் தமிழ்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.94 வாழும் தமிழ்

தமிழ் நாட்டின் நடுவாக உள்ள மதுரையை உள். ளிட்ட பகுதிக்குச் செந்தமிழ் நிலம் என்று பெயர். அக்த நாட்டு வழக்கிலே பயின்றுவரும் சொல்லேயே இயற்சொல்லாக வைத்துக்கொண் டார்கள்.

‘இயற்சொல் என்பவை செந்தமிழ் கிலத்து வழக்காக அமைந்து தம் பொருளைச் சரியானபடி உணர்த்தும் சொற்கள்’ என்று தொல்காப்பியர் இலக்கணம் சொல்கிரு.ர்.

லக்கிய உலகத்துக்கே உரிய சொற்களாகிய திரிசொல்வின் இலக்கணத்தையும் அவர் சொல்கிரு.ர். ஒரே பொருளேக் குறித்து வரும் பல சொல்லும், பல பொருளேக் குறித்துவரும் ஒரு சொல்லும் என்று இரு வகைப்படும் திரிசொல்’ என்பது அவர் சொல்லும் இலக்கணம்.

மலே என்பது இயற் சொல். தமிழ் நாட்டு வழக்கில் இருப்பது. ஆல்ை மலேயைக் குறிக்க வேறு பல் சொற்கள் இலக்கியத்தில் வழங்குகின்றன. வெற்பு, விலங்கல், விண்டு என்பவை மலையைக் குறிக்க வழங்கும் திரிசொற்கள். எகினம் என்ற ஒரே சொல் அன்னம், கவரிமா, புளி, நாய் என்பவற்றைக் குறிக்கும். அதுவும் திரிசொல்லே. இயற்சொல்லைத் தமிழன் இயல்பாகவே தெரிந்து கொள்வான். திரிசொற்களை இலக்கியப் பயிற்சியால் தெரிந்து கொள்வான்.

செந்தமிழ் காட்டை அடுத்துள்ள உள் நாட்டுப் பிரிவுகள் பன்னிரண்டு என்று அக்காலத்தில் வகுத்திருந்தார்கள். இன்றுள்ள ஆங்கிர மண்டலத் தின் தென்பகுதி, அருவா வடதலை நாடாகிய தமிழ். மண்டலப் பகுதியாக இருந்தது. மலேயாள நிலம் மலைநாடு என்ற பெயர் பெற்ற தமிழ் நாட்டுப் பகுதி. அங்கே மாத்திரம் வழங்கிய சில சொற்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/203&oldid=646360" இலிருந்து மீள்விக்கப்பட்டது