பக்கம்:வாழும் தமிழ்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08 வாழும் தமிழ்

2

ளக்கமாகத் தெரிவதோடு அங்த மாதிரியான பச்சிலே தனி இன்பமும் ஏற்படுகிறது.

الله

இந்த வகையிலே சேர்ந்த மற்ருெரு வழக்கைத் தொல்காப்பியர் எடுத்துச் சொல்கிரு.ர்.

'இந்த வழி எங்கே போகிறது:”

'இது புதுக்கோட்டை வரையில் போகிறது” என்ற பேச்சு நம் காதில் விழுந்ததுதான், அந்தப் பேச்சின் சொற்களிலே சிறிது புகுந்து பார்ப்போம். கேள்வியிலும் விடையிலும், குறிப்பிட்ட வழி கால் பெற்று நடப்பது போலவும், போகிறது போலவும் சொற்கள் அமைந்திருக்கின்றன. கேட்கிறவனுக்கோ சொல்பவனுக்கோ வழி தானே நடக்கும், போகும் என்ற கருத்தே இல்லை. ஆனலும் பேச்சு, அப்படி அர்த்தமாகும்படி அமைந்திருக்கிறது. இங் த ப் பேச்சிலே ஒரு சுவை இருக்கிறது.

"கடல் அலேகள் ஒன்றைேடு ஒன்று மோதிப் புரண்டு கொங்தளிக்கின்றன. அந்த அலைகளேக் காணுங்தோறும் அவன் நெஞ்சும் கொங்தளித்தது. ஒவ் வோர் அலேயும் ஒவ்வோர் இரகசியத்தைக் கூறியது” என்று எழுத்தாளர் எழுதுகிருர், 'ஒவ்வோர் அலேயும் இரகசியத்தைக் கூறுவதற்கு வாயா இருக்கிறது?’’ என்று கேட்கலாமா? அப்படி எழுதுவது ஒர் அழகு. 'இவன் வயிறே சொல்கிறதே. நாலு நாள் சாப்பிட வில்லையென்று’ என்று பேசுகிற பேச்சிலே உள்ள அழகே எழுத்தாளர் எழுத்திலே வேறு உருவத்தில் தோன்றுகிறது. அதனைச் செய்யுளிலும் காணலாம்.

'பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும்’ என்பது குறள். கண் எப்படி உரைக்கும்? வாய் அல்லவா உரைக்கும்?' என்று கேட்பவர் சுவை அறியாதவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/217&oldid=646391" இலிருந்து மீள்விக்கப்பட்டது