பக்கம்:வாழும் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - வாழும் தமிழ்

இலக்கணக்காரர் பார்த்தார். படைப்பிலே ஆண், பெண் என்ற பிரிவிலே சேராவிட்டாலும் செயற்கையில்ை, தாமே விரும்பி எங்தக் கூட்டத்திலே அவர்கள் சேருகிருர்களோ அந்தக் கூட்டத்துக்குரிய பாலில் சேர்த்து வழங்குவதே சரி என்று சொன்னர். ஆகவே, பேடி வந்தாள், பேடி வந்தான் என்று சொல்லும்போது அந்தப் பேடியின் வாழ்க்கைகூட நமக்குத் தெரிந்துபோகிறது. மகளிரோடு சேர்ந்து வாழ்கிறதும் ஆடவரோடு சேர்ந்து பழகுகிறதும் சொல்லிலேயே தொனிக்கின்றன.

உயர்திணையிலே பிறந்தும் ஆண் பெண் பிரிவுக்கு. உட்படாத அலிகளேப் பேச்சில் வழங்கும் முறையைத் தொல்காப்பியர் அறிந்து அதைச் சொல்கிரு.ர். அதற்குமேல் தெய்வத்தைப்பற்றிய கருத்து ஒன்றைச் சொல்கிருர்,

மனிதர்களில்தான் ஆ ண் .ெ பண் என்ற வேறுபாடு இருக்கிறது. தெய்வத்துக்கு இந்த வேறுபாடு இல்லை. உயர்திணை அஃறிணையென்று கூடப் பிரிக்க முடியாதே. அப்படியானல் தெய்வங் களைச் சொற்பிரபஞ்சத்தில் எப்படிப் பிரிப்பது? தெய்வத்திற்கென்று தனியே ஒரு பிரிவு வகுப்பதா?

தமிழர் தம் வாழ்க்கையில் அப்படிப் பிரிவு: வகுத்திருந்தால் இலக்கணத்திலும் வகுத்திருப்பார் கள். தெய்வத்துக்குச் சாதி, திணை, பால் என்ற பிரிவு இல்லாவிட்டாலும் மனிதன் தன் மனத்துள் தியானிப்பதற்கும், உரு அமைத்து வழிபடுவதற்கும் சில சம்பிரதாயம் வேண்டும். தனக்குத் தெரிந்த உருவத்தை எண்ணுவதுதான் மனிதன் இயல்பு. ஆகவே தெய்வத்தைச் சிங்தனைக்குக் கொண்டு வந்து உரு அமைக்கும்போதும் பேச்சுக்குக் கொண்டு வந்து உரையாடும் போதும் தான் அறிந்த திணையுள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/23&oldid=645960" இலிருந்து மீள்விக்கப்பட்டது