பக்கம்:வாழும் தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ

சொல்லிலும் லாபம் . 3

அவன் கேட்டதற்கு இனமாகிய பொருள் இருந்தால் அதனைக் கூறி, இல்லையென்பதைப் புலப்படுத்தியும், அப்பொருள் இருக்குமானல், இவ்வளவு இருக்கிறது என்று வரையறுத்தும் புலவர்கள் சொல்வார்கள். கேட்போர் விடை கூறுவோர் என்னும் இருவர்பாலும் அவசியம் அல்லாத வார்த்தைகள் பெருகாமல், சுருங்குவதற்காகவே இங்ங்னம் சொல்வர்.)

இலக்கணச் சூத்திரங்களில் இங்கச் சம்பா ஷணேயைப் பொதுவாக எல்லோருக்கும் உரியதாகச் சொல்லியிருந்தாலும், அவற்றுக்கு உரை வகு க்க ஆசிரியர்கள் அங்காடியில் நடக்கும் சம்பாஷணை யையே உதாரணமாகக் காட்டியிருக்கிருர்கள்.

'பயறுளவோ வணிகீர்? - என்ருல் - உழுந்து அல்லது இல்லே என்க. தன்னுழை அவை உளவாயின்: அவன் வினவிய அப்பொருளேயே சொல்லலுறுமே யெனின், இவை அல்லது பயறில்லே, இப்பயறு அல்லது இல்லே என்று சுட்டிக் கூறுக’என்பன இளம்பூரணர் என்னும் உரையாசிரியர் எழுதும் உதாரணங்கள்.

'நூறு விற்கும் பட்டாடை உளவோ என்று. வியிைனர்க்கு, ஐம்பது விற்கும் கோசிகம் அல்லது. இல்லை என்றும் கூறுக’ என்பார் நச்சினர்க்கினியர்.

இந்த இலக்கணத்தையும் உரைகளையும், பார்த்தார் பரஞ்சோதி முனிவர் என்னும் புலவர். நன்னூற் சூத்திரத்தை அப்படியே மாற்றிக் திருவிளையாடற் புராணத்தில் பாட்டாகப் பாடி விட்டார். மதுரையில் உள்ள வணிகர், சொல்லினும் லாபம் கொள்வார்’ என்று சொல்ல வந்தவர், சொல் சுருங்குவதற்காக இலக்கணக்காரர் வி தி க் த. இலக்கணத்தை அப்படியே எடுத்து அமைத்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/44&oldid=646008" இலிருந்து மீள்விக்கப்பட்டது