பக்கம்:வாழும் தமிழ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பேச்சில் அழகு

'பேசப் போனயா, சாகப் போனயா?” என்று ஒரு பழமொழி வழங்குகிறது. சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் அரிய காரியம் என்பது அதன் கருத்து. ஆனால், சாதாரணமாகப் பேசுவதில்கூடப் பல தொல்லைகள் இருக்கின்றன. சில சமயங்களில் சில வார்த்தைகளைப் பேசுவதைவிடப் பேசாமல் இருப்பது நல்லதாக இருக்கும்.

பேச்சு விஷயத்தில் எத்தனையோ மரியாதை உண்டு. மரியாதை தெரியாமல் பேசுவதை நாகரிக மென்று கருதமாட்டார்கள். நெடுங் காலமாக நாகரிக வாழ்க்கை வாழ்ந்தவர்களுடைய பேச்சு மரியாதையுடையதாய், குறிப்பு நிரம்பியதாய்" இருக்கும். தமிழர் வாழ்க்கையில் தமிழ் மொழி முக்கியமான கருவியாக இருப்பது. ஆகவே அவர்களுடைய வாழ்க்கையில் கருத்தும் பேச்சும் செயலும் வரவரத் திருத்தமுடையனவாக அமைந்தன.

நாலு பேருக்கு நடுவே பேசும் பேச்சையே நாற்பது பேருக்கு நடுவில் பேசக்கூடாது. தனி மனிதனேடு பேசும்போது சிலவற்றைத் தாராள மாகப் பேசலாம். அதே கருத்தை ஒரு சபையிலே சொல்லும்போது அதற்கென்று ஒரு மரியாதையும் நாகரிகமும் உண்டு. வீட்டிலே காம் இருக்கும்போது எப்படி எப்படியோ இருக்கிருேம். நம்மோடு: நெருங்கிப் பழகுகிறவர் வந்தால் முகத்தைத் துடைக்காமல் மேல்துண்டுக.ட இல்லாமல் போய்ப் பார்க்கிருேம். அவ்வளவு அதிகமாகப் பழகாதவராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/46&oldid=646012" இலிருந்து மீள்விக்கப்பட்டது