பக்கம்:வாழும் தமிழ்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

வந்தன. இவற்றை வெளியிட்ட தினமணி' ஆசிரியர் பால் நன்றி பாராட்டுகிறேன்.

தொல்காப்பியர் காலத்துக்கும் நம் காலத்துக்கும் இடையில் பல நூறு ஆண்டுகள் சென்ருலும் அன்றிருந்த 'சில அடிப்படையான பண்புகள் நம் உள்ளக் கருத்திலும் :உரையிலும் வாழ்க்கையிலும் இருக்கின்றன. தமிழ் மொழி, நூல் அளவில் நிற்பதல்ல. வாழும் மக்கள் வழங்கும் மொழி அது. ஆகவே வாழ்க்கையின் சாரம் அதன்கண் ஏறியிருக்கும். காலக் காற்றிலே தளிர்த்து முற்றி அசைந்து வாடிச் சருகாகி உதிர்ந்த இலைகள் பல இருந்தாலும், வர வர உரம் பெற்ற அடி மரமும், இத்தனை மாற்றங்களுக்கும் இடங்கொடுத்து ஊன்றி நிற்கும் ஆணிவேரும்போல் முற்கூறிய பண்புகள் தமிழர் வாழ்க்கையிலே இருக்கின்றன. வாழ்க்கையின் நிலையை, மொழி காட்டுகிறது; அதன் சிறந்த பகுதிகளை இலக்கியம் காட்டுகிறது. இந்த இரண்டின் இயல்புகளையும் இலக்கணம் வகுத்துக்காட்டுகிறது. ஆகவே தொல் காப்பியம் என்னும் இலக்கணம், அன்றும் இன்றும் வாழுந் தமிழைப்பற்றிச் சொல்கிறது; இலக்கியத்திலும் உலகியலிலும் வாழும் த மிழைப்பற்றிப் பேசுகிறது. இந்தக் கருத்துடனே, வாழும் தமிழ் என்ற பெயரை இந்தப் புத்தகத்துக்கு வைத்தேன். -

தொல்காப்பியத்தின் விளக்கம் அன்று இது; அதில் கூறப் பெறும் இலக்கணச் செய்திகளை முறையாகத் தொகுத்துத் தருவதும் அன்று; தொல்காப்பியச் :சொல்லதிகாரத்தில் உள்ள செய்திகளாகிய சிறு புழைகளினூடே பரந்து, விரிந்த பண்டைத் தமிழர் வாழ்க்கையைப் பார்க்க முயலும் முயற்சி இது. தொல் காப்பியத்தில் உள்ள இலக்கணச் செய்தி விளங்கினல் தான் அதல்ை புலப்படும் வாழ்க்கைத் தொடர்பு புலனுகும். ஆகவே பல இடங்களில் இலக்கணச் செய்திகளை விளக்கியிருக்கிறேன். பெரும்பாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/6&oldid=645921" இலிருந்து மீள்விக்கப்பட்டது