பக்கம்:வாழும் தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வாழும் தமிழ்

பன்மையிலே சொல்வது இரண்டாவது குற்றம்' என்று ஒன்று இரண்டு மூன்று வாய்பாட்டைக் கொண்டு அந்தப் பேச்சை அளக்கலாமா? பாஷையின் விசித்திரம் கட்டுப்பாட்டிலே அடங்காது. வாழ்க்கை விரிய விரியப் பேச்சு விரிகிறது; விசித்திரங்களும் விரிகின்றன. இலக்கணம் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ள இடம் வைத்திருக் கிருர்கள்.

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா நல்ல

என்று குத்திரம் செய்திருக்கிருர் கொல்காப்பியர்.

"ஒரு மனிதனேயும் ஒரு பெண்மணியையும் பன்மை வாய்பாட்டால் சொல்லும் வார்த்தைகளும், ஒரு பொருளே அப்படிச் சொல்லும் வார்த்தைகளும் உலக வழக்கிலே உயர்வாக மதித்துச் சொல்லும் வார்த்தைகள். இலக்கண முறைப்படி வரும் சொற். பிரயோகம் அல்ல” என்பது இதன் பொருள்.

'இப்படி வருகிறதே, இதற்கு இலக்கணம் எங்கே இருக்கிறதென்று இலக்கணச் சூத்திரங்களைத் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். வாழும் மொழியில் இத்தகைய வழக்குகள் வாழ்க்கையைக் கொண்டு தெரிந்துகொள்ள வேண்டியவை” என்று கொல்காப்பியர் சொல்வதாகவே நாம் கொள்ள வேண்டும். .

இங்கச் சூ த் தி ர த் தி ன் உரையில் உரை யாசிரியர்கள் வழக்கில் வரும் வேறு பலவற்றையும் சொல்லி, இந்த இலக்கணத்தைக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/75&oldid=646077" இலிருந்து மீள்விக்கப்பட்டது