பக்கம்:வாழும் தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டப் பெயர்கள் 77

செம்மை சான்ற காவிதி மாக்களும் என்று மதுரைக் காஞ்சி கூறுகின்றது. இந்தப் பட்டம் பெற்ற வேளாளர் குடும்பத்தில் முடியுடைவேங்தர்கள் கூடப் பெண் கொள்வார்களாம். இவர்களுக்கு அடை யாளமாக ஒரு பூவை அரசன் வழங்குவான். அதற்குக் காவிதிப் பூ என்று பெயர். -

நம்பி என்றும் பெருகம்பி என்றும் இரண்டு பட்டப் பெயர்கள் உண்டு. இவ்விருவர்களுக்கும் அடையாளப் பூவும் உண்டு. இவர்களுள் பெரும்பிப் பட்டம் பெற்றவர் அரசர்களுக்கு அமைச்சராக இருக்கும் தகுதியுடையவர், அறுபத்து மூன்று 5ாயன்மார்களுள் ஒருவராகிய குலச் சிறையார் பெருங்ம்பி என்ற பட்டம் பெற்றவர். அவர் பாண்டியனுக்கு மங்திரியாக இருந்தார்.

எட்டி என்ற பட்டமும் அரசல்ை வழங்கப் பெறுவது வணிக குலத்தினருக்கு உரியது. இந்தப் பட்டத்துக்கு அடையாளமாக எட்டிப்பூ என்று ஒரு பொற்பூ உண்டு.

ம ணி .ே ம க சில யி ல் தருமதத்தன் என்ற ஒரு வனுடைய கதை வருகிறது. அவன் தான் காதலித்த பெண்ணே மணக்க முடியாமையால் தன் ஊராகிய காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு மதுரைக்குச் சென்று அங்கே வியாபாரம் செய்து வந்தான். அந்த வியாபாரத்தில் பெரும்பொருள் ஈட்டினன். அதனேடு அரசனுடைய மதிப்பைப் பெற்று எட்டிப் பட்டம் பெற்ருன். இதை மணிமேகலை பின்வரும் அடிகளில் வெளியிடுகிறது:

தரும் தத்தனும் - வாணிக மரபின் வருபொருள் ஈட்டி நீள்நிதிச் செல்வ னுய் நீணில வேந்தனின் எட்டிப்பூப் பெற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/86&oldid=646102" இலிருந்து மீள்விக்கப்பட்டது