பக்கம்:வாழையடி வாழை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 109

சூரியன் வருவது யாராலே?
சந்திரன் தெரிவது எவராலே:
காரிருள் வானில் மினிமினிபோல்
கண்ணிற் படுவன அவை என்ன?
பெருமழை பெய்வது எவராலே?
பேரிடி மின்னல் எதனாலே?
ஆரிதற் கெல்லாம் அதிகாரி?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ!

என்று, தோன்றாத் துணையாய் நின்று உயிர்களை இயக்கும் இறைவன் செயல்களைக் குறிப்பிட்டு, இறை வழிபாட்டின் இன்றியமையாமையினை அடுத்துக் குறிப்பிடுகின்றார் கவிஞர்:

'அல்லா வென்பார் சிலபேர்கள்;
அரன் அரியென்பார் சிலபேர்கள்;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை என்பார்கள்;
சொல்லால் விளங்கா நிருவாணம்
என்றும் சிலபேர் சொல்வார்கள்;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறது!
அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்!
எந்தப் படியாய் எவர் அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன?
நிந்தை பிறரைப் பேசாமல்,
நினைவிலும் கெடுதல் செய்யாமல்,
வந்திப் போம் அதை வணங்கிடுவோம்;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்!”

தமிழன் இதயம் : யாராலே


படைத்தவனை எண்ணாது பணத்தையே நாட்டமாய்க் கொண்டுழலும் பணப்பித்தர்களை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/111&oldid=1349994" இலிருந்து மீள்விக்கப்பட்டது