பக்கம்:வாழையடி வாழை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

வாழையடி வாழை


திரு. சோமு அவர்கள் பள்ளியில் படிக்கும் நாள் களிலேயே கவிதை இயற்றும் கலை கைவரப் பெற்றிருந்தார் என்பதனை, அவர் பதினாறு வயதுள்ள மாணவராய் இருந்து எழுதிய 'தீபாவளிப் பாட்டு’ என்ற கவிதை ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளி வந்ததிலிருந்து அறியலாம். அப்பாடலின் சில பகுதிகளே அவர் பின்னாளில்-1948-ஆம் ஆண்டில்-சிறந்த கவிதைகளை இயற்றின கவிஞர் என்று தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரால் பரிசளித்துப் பாராட்டப் படுவார் என்பதற்குக் கட்டியங் கூறுவன போல அமைந்துள்ள அழகினைக் காணலாம்:

தீபாவளிப் பாட்டு

(சிறுவர் களியாட்டம்)

“காலையில்எழுந்தெண்ணெய் தேய்த்தோமடா!-மிகக்
களிப்புடனே வெந்நீரில் குளித்தோமடா!
நீலவா னத்தில்இடி இடிக்குதென-யாரும்
நித்திரைவிட் டெழவெடி போடுவமடா!
- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - -
மாடியிலே போயிருக்கும் அத்தான் முதுகில்-மெல்ல
மாப்பிள்ளை வெடிவீசிப் போடுவமடா
ஒடிப்பாய்ந்து நம்மையவர் அடிக்கவந்தால்-ஒரு
ஒத்தைவெடி போட்டுவிட்டே ஓடுவமடா!

இவ்வாறு அருமையாகப் பதினாறாம் வயதிலே அற்புதமாகக் கவிதை இயற்றிய கவிஞர், சொற்செறிவும் பொருட்செறிவும் துலங்கும் கவிதைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எளிய சொற்களில் இனிய சந்தத்தினைப் புகுத்தி, அக்கவிதைகளில் தமிழ்ப் பண்பாடு ஊடுருவி நிற்கும் வண்ணம், உயிரோட்டமான கவிதை களைப் படைக்கும் ஆற்றல் மிக்க கவிஞர் சோமு அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/162&oldid=1338165" இலிருந்து மீள்விக்கப்பட்டது