பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இப்படி படபடவென்று வார்த்தைகளைப் பொரிந்து தள்ளி விட்டுக் கூடத்திற்கு வந்தாள் லட்சுமி. "என்ன மன்னி? ஒட்டமும் கடையுமாக இருக்கிறதே! சாத் திரி ஏதாவது விருந்து கிருந்து உண்டோ? வேணு சிரித்துக் கொண்டே இப்படிக் கேட்டதுதான் தாமதம்; லட்சுமியின் முகபாவம் சடக்கென்று மாறிற்று. சற்றுமுன் காமிரா உள்ளே ராஜத்தின் எதிரே கடுகடுவென்று காட்சியளித்த அந்த முகத்திலே இப்போது மந்தகாசம் தவழ்ந்தது. மிருதுவான குர வில், உம், விருந்து என்று ஒன்று கடந்தால் அதில் வேணுவுக்குத் தானே முதல் இடம்? பருப்பு இல்லாமலா கல்யாணம் ? கூடிய சிக்கிரம் அந்தக் காலமும் வராமலா போகிறது?’ என்ருள். . ராஜத்தின் நெஞ்சு வெடித்து விடும்போல் இருந்தது. 'இதென்ன, எல்லாம் ஒரே விசித்திரமாயும் விபரீதமாயும் இருக் கிறதே! என்று எண்ணிக் கொண்டே மெல்ல எழுந்து அறையை விட்டு வெளியே வந்து வேக்மாக நடந்து கூடத்தைக் கடந்து: சமையல் அறையை அடைந்தாள். அலுவல்களைக் கவனித்தாள். 11. அவப் பெயர் அன்றுஇரவு. எல்லோரும் படுக்கைக்குச் சென்று விட்டார்கள் ாஜம் தாக்கம் வராமல் வேதனையுடன் படுக்கையிலே புரண்டு. கொண்டு கிடந்தாள். தணிவான குரலில் சுந்தரேசனும் லட்சுமி பும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னவோ பேசிக் கொள்கிறர்கள் என்றுதான் முதவில் அலட்சியமாய் இருந்தாள் ராஜம், பிறகு அடிக்கடி தன் பெயர் அடிபடுவது காகில் கேட்ட தும் சற்று உற்றுக் கவனித்தாள். . . - வேணு தங்கமான பிள்ளை. பிறந்த நாள் முதல் அவனே நன்ருக அறிந்திருக்கிற உங்களுக்கு நான் அவனைப்பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை. ராஜமும் நல்ல பெண்தான். ஆலுைம் அவள் கடந்து கொள்கிற தென்னவோ எனக்குப் பிடிக்கவில்லை. சொன்னல் என்னைத் தப்பாக எண்ணிக் கொண்டுவிடப் போகிறீர் களே என்று பயமாக இருக்கிறது. வந்து முழுசாக மூன்று நாள் ஆகவில்லை. அதற்குள் எத்தனை தடவை தோட்டத்திலே போய் கின்று அவனேப் பார்ப்பதும் சிரிப்பதும் போன்ற காரி யங்களைச் செய்திருக்கிருள் தெரியும்ா? கரைக்கிறபடி கரைத்தால் கல்லும் கரைந்துவிடுகிறது. வேணு நல்ல பிள்ளைதான். இதோ: கம்ம செளதாமினி, நான், ஊரில் இன்னும் எத்தனையோ பேர். எல்லோருடனுந்தான் அவன் நெடு நாட்களாகப் பழகிக் கொண்.