பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் }{3} பப்ளிஷிங்ஹவுஸ் அமைக்கப்பட்டிருந்தது. அவரே அநேக நூல்களைத் தமிழாக்கியிருந்தார். கார்க்கி கதைகளில் மொழி பெயர்த்திராத சில சிறுகதைகளைத் தமிழாக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார். நான் மொழிபெயர்த்த கதைகள் சின்னஞ் சிறு பெண்' என்ற புத்தகமாக வந்தன. கார்க்கி கட்டுரைகளை மொழி பெயர்த்தேன். அவை கார்க்கி கட்டுரைகள் என்ற புத்தகமாகப் பிரசுரம் பெற்றன. 1957 இல், சண்முகம் பிள்ளை அண்ணாச்சி மிக நல்ல மனிதர். பொது நலப் பணிகள் புரிவதில் ஆர்வம் மிகக் கொண்டிருந்தார். எல்லோரிடமும் அன்பு காட்டி உதவிகள் புரியும் இயல்பினர். அவர் மரணம் அடைகிற வரை, என்னிடம் சகோதர அன்புகாட்டிப் பிரியமாகப் பழகி வந்தார். அமெரிக்க நிதி உதவி பெற்று, புத்தகங்கள் வெளியிடுவதில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களில் இந்தியா புக் ஹவுஸ் என்பதும் ஒன்று. அகில இந்திய ரீதியில் தொழில் நடத்திய இந்த நிறுவனத்தின் கிளை சென்னையிலும் இருந்தது. தமிழ் நூல்களை வெளியிடுவதற்காக அது 'பெர்ள் பப்ளிகேஷன்ஸ்' - முத்துப் பிரசுரம் என்ற பிரிவை அமைத்திருந்தது. அந்தப் பிரிவின் 'எடிட்டர் ஆகக் கவிஞர் சது.க. யோகியார் பொறுப்பு வகித்தார். அமெரிக்க வெளியீடுகளான கம்யூனிச எதிர்ப்பு நூல்களை இந்தி மொழிகளில் பரப்புவது தான் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம். அதை மறைக்கும் முறையில் நல்ல இலக்கிய நூல்களையும் மொழி பெயர்த்து வெளியிடும் வேலையும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம் முறையினால் பல நல்ல புத்தகங்கள் தமிழுக்குக் கிடைக்க வழி ஏற்பட்டது. எர்னஸ்ட் ஹெமிங்வே நாவல்கள், ஹெலன் கெல்லர் வரலாறு, எமர்ஸன் சிந்தனைகள், ஆபிரஹாம் லிங்கன் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல், சில சிறுகதைத் தொகுப்புகள் இப்படி வரவேற்புக்கு உரிய நல்ல நூல்கள் தமிழாக்கப் பெற்றன. இவ்வகையில், ராபர்ட் ரூஆர்க் எழுதிய 'ஓல்ட் மேன் அன்ட் தி பாய்' என்ற புத்தகத்தைத் தமிழாக்கும் பணி எனக்குத் தரப்பட்டது. இது ஒரு வித்தியாசமான புத்தகம், அனுபவம் மிகுந்த ஒரு முதியவர் தமது வேட்டை அனுபவங்கள், பறவைகள், மிருகங்கள், மீன்கள் மற்றும் மரம், செடி கொடிகள் பற்றிய தனது பட்டறிவை எல்லாம் தம்முடைய பேரனுக்குச் சொல்கிறார். சுவாரசியமாக, தனிமுறையில் விவரிக்கிறார். அவை நயம் செறிந்த அழகிய நடையில் எழுதப்பட்டுள்ளன. பொருள் பொதிந்த சிந்தனைகளும் அங்கதக் குறிப்புகளும் அவரது விவரிப்புக்குக் கனம் சேர்த்திருக்கின்றன. "தாத்தாவும் பேரனும் என்ற பெயரில் அந்த நூலை நான் தமிழாக்கினேன். அழகிய புத்தகமாக அது பிரசுரம் பெற்றது. 'முத்துப் பிரசுரங்கள் எழுபத்தைந்து பைசா. அல்லது ஒரு ரூபாய் என்ற குறைந்த