பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 வாழ்க்கைச் சுவடுகள் ஆயன் என்பவர் ஒரு சாதாரண கிராமவாசி, ஓவியத்திறமை உடையவர். கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்துகிறவர். நல்ல ரசிகர். அவர் தாம் பார்த்தவை. கேட்டவை, ரசித்த காட்சி இனிமைகள், பயண அனுபவங்கள் முதலியவற்றை ஒரு நண்பருக்குக் கடிதங்களில் எழுதித் தெரியப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தாம் பெற்ற இன்பத்தை ரசிக்கத் தெரிந்த பலரும் பெற்று மகிழட்டுமே என்ற நல்ல எண்ணத்தோடு அந்த நண்பர் ஆயன் கடிதங்கள் என்று அவற்றைத் தொகுத்து வெளியிட்டார். ரசம் நிறைந்த புத்தகம் لمات ہونگے நான் வெளியூர்களில் வசிக்கத் தொடங்கிய வருடத்தில் இருந்தே - 1939 முதலே - நிறைய கடிதங்கள் எழுதுவதில் உற்சாகம் காணலானேன். என் அண்ணாவுக்கு எனது அனுபவங்கள் பற்றி எழுதினேன். பிறகு நண்பர்கள் பலருக்கும் எழுதினேன். எனக்குக் கடிதங்கள் எழுதுகிறவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்குப் புத்தகங்கள் பற்றியும், பலவித எண்ணங்கள் குறித்தும் எழுதினேன். உங்கள் கடிதங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. ஊக்கமும் உற்சாகமும் தருகின்றன. எத்தனையோ விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அவை உதவுகின்றன. உங்கள் கடிதங்களைப் பொக்கிஷம் போல் பாதுகாக்கிறோம் என்று அவ்வப்போது பலரும் எனக்கு எழுதினார்கள். - பொதுவாக நேரில் பார்க்கிறபோது நான் அதிகமாகப் பேசுகிற இயல்பினன் இல்லை. ஆனால் கடிதங்களில் நான் அதிகம் பேசினேன். விரிவாக அனைத்து விஷயங்கள் பற்றியும் உரையாடினேன். பார்த்தவை. படித்த புத்தகங்கள், சந்தித்த மனிதர்கள். பயண அனுபவங்கள், கனவுகள். ஆசைகள், சிந்தனைகள் என்று மனம் விட்டுப் பேசினேன் கடிதங்களில் ஒவ்வொரு கடிதமும் பல்சுவை விருந்தாகவே மதிக்கப்பட்டது கடிதங்கள் கிடைக்கப்பெற்றவர்களால். சிலர் தங்களுடைய பிரச்சினைகளை, வாழ்க்கைக் கஷ்டங்களை எனக்கு எழுதினார்கள். நான் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் எழுதினேன். அவை நண்பர்களுக்கு இதம் அளித்தன. அதனால் என் கடிதங்களை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். சூடாகவும் சுவையாகவும், நையாண்டிப் பண்போடும் என் எண்ணங்களைக் கடிதங்களில் எழுதினேன். வருடங்கள் ஆக ஆக, என் கடிதங்கள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கருத்துத் தெரிவிக்கலானார்கள். அது சாத்தியப்படாத காரியம் என்று சொல்லிவந்தேன். 1990களின் ஆரம்பத்தில் நண்பர் மு. நாகரத்தினம் இக் கருத்தை வலியுறுத்தி வந்தார். அவரே என் கடிதங்களைச் சேகரித்துத் தொகுத்து