பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 33 3 என் சொந்த ஊர் ராஜவல்லிபுரம் என்று நான் சொல்விக் கொண்ட போதிலும் அந்த ஊரின் நான் தொடர்ந்து நீண்ட நாட்கள் வசித்ததில்லை மொத்தத்தில் அதிக காலம் அங்கே வழிந்ததும் இல்லை என் தந்தை கூடப் பிறந்தவர்கள் ஏழு ஆண்களும், மூன்று பெண்களும். எல்லோரும் உள்ளூரிலேயே வசதியாக வாழ்ந்தார்கள். என் அப்பாதான் உத்தியோக நிமித்தம் வெளியூர் சென்று ஊர் ஊராகச் சஞ்சரித்து அனுபவம் பெற்றார். அப்பா நல்ல உயரமும், மிடுக்கான தோற்றமும், எடுப்பான மீசையும் கொண்டு கம்பீரமாக இருந்தார். அவர் பார்த்த வேலை எக்ஸைஸ் சப் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் தான். ஆயினும் ஊர்மக்கள் இன்ஸ்பெக்டர் பிள்ளை' என்று அவரிடம் பயமும், மதிப்பும் காட்டி வந்தார்கள். அப்பாவும் அதிகாரத் தோரணைகளோடு ஆக்கினைகள் செய்து வைத்தார். ஊரில் திருட்டு நடந்தால், வைக்கோல் படப்பில் தீ வைக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் இன்ஸ்பெக்டர் பிள்ளையிடம் முறையிடத் தவறியதில்லை. அப்பாவும் அதிகாரத்தை உபயோகித்து, ஆட்களைப் பிடித்து வரச் செய்து, அடித்து உதைத்து உண்மை வெளிவரும்படி செய்து, சரியான குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவினார். அவருடைய அதிகாரம் உள்ளூரில் மட்டுமின்றி அவர் வேலை பார்த்த இதர ஊர்களிலும் அவருக்குச் செல்வாக்கும், சிறப்பும் பெற்றுத் தந்தது. பொதுவாக, எந்த சர்க்கார் அதிகாரிக்கும் மக்கள் வெகுவாகப் பயந்து கொண்டிருந்த காலம் அது. அப்பா ஒட்டப்பிடாரத்தில் பணி புரிந்த காலத்தில் தான் எனக்கு முதன்முதலாக ராஜவல்லிபுரம் அறிமுகம் ஏற்பட்டது. அம்மாவும் சகோதரர்களும் நானும் ஊருக்கு வந்து சில மாதங்கள் தங்கினோம். பிறகு அப்பா விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். வீட்டில் மேலும் சில பகுதிகள் அதிகமாகக் கட்டப்பட்டன. பெருங்குளம் ஊரில் வசித்த போதும், ராஜவல்லிபுரம் வந்து தங்கிச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. அப்பாவுக்கு உத்தியோக ரீதியில் ஊர்மாற்றம் கிட்டியதும் சில மாதங்கள் ஊரில் தங்கும்படி எங்களைக் கொண்டு வந்து சேர்த்திருந்தார். அந்நாட்கள் ஊரில் மனோகரமாகக் கழிந்தன. ராஜவல்லிபுரம் ஊருக்குத் தெற்கே ஒரு மைல் தள்ளி தாமிரவர்ணி ஆறு ஓடுகிறது. அதன் கரை மீது செப்பறை என்ற திருத்தலம் இருக்கிறது. நடராஜர் கோயில் செப்புச்சிலை மிக நேர்த்தியானது காட்டுக் கோயில்' என்று பக்தர்கள் தினசரி அதிகம் வருவதில்லை. பனைமரங்களும், உடை கருவேல் போன்ற முள் மரங்களும் நிறைந்த சூழ்நிலை. தினம் காலையிலும்