பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 வாழ்க்கைச் சுவடுகள் விசேஷங்களுக்கு அவர் வருவதே இல்லையே என்ற மனக்குறை உறவினர்களுக்கு நிரந்தரமாக இருந்தது. அண்ணாவுக்கோ வாழ்க்கைச் சுமை பெரும் பாரமாக அழுத்திக் கொண்டிருந்தது. குடும்பப் பொறுப்புப் பெரிதாக இருந்தது. அந்தக் கவலையோடு அவர் மேலும் மேலும் உழைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தார். தனது சந்தோஷத்துக்காக இலக்கிய நூல்களைப்படித்தார். உலக இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். ஆங்கிலத்தில் நன்றாக எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது. எனது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சுரதா கவிதைகள் சிலவற்றையும், என். ஆர். தாசன் கதைகள் ஒன்றிரண்டையும் அவர் ஆங்கிலமாக்கினார். அண்ணா அசோகன், தமிழாக்கிய உலகத்துக் கதைகள் 1940கள் 50களில் சிறுசிறு புத்தகங்களாகப் பிரசுரம் பெற்றன. எம். சூரி என்பவர் வெளியிட்டார். மாக்சிம் கார்க்கியின் 'லோயர் டெப்த்ஸ்’ நாடகம் தமிழாக்கப்பட்டு அதல பாதாளம் என்ற நூலாக வெளிவந்தது. கிராம ஊழியன் இதழில் வியாபார உலகம்' என்ற தொடர்கதை எழுதினார். அவர் எழுதிய 'எம்டன் பிள்ளை' எனும் நாவல் பின்னர் கலையாத கனவுகள் என்ற பெயரில் கலைஞன் பதிப்பகம் வெளியீடாக வந்தது. கடைசி வரை அவர் தமது ஆத்ம திருப்திக்காக நிறையப் படிப்பதிலும் சிறிதளவு எழுதிவதிலும் ஆர்வம் காட்டினார். கடும் உழைப்பும் ஓய்வின்மையும் அவர் உடல்நிலையை வெகுவாகப் பாதித்தன. இரத்த அழுத்தம் அடிக்கடி தொல்லை கொடுத்தது. சிறுசிறு நோய்கள் தோன்றின. உரிய மருந்துகள் சாப்பிட்டு, ஓரிரு நாள் விடுப்பில் இருந்து மீண்டும் உழைப்பதிலேயே இன்பம் கண்டார் அவர். எபிஷியன்ட் பப்ளிஸிட்டீஸ் பணியிலிருந்து ஓய்வுபெறும் போதே அண்ணாவுக்கு எழுபது வயதாகியிருந்தது. அதன்பிறகும் அவர் குடும்ப நலன் கருதி, பிரில்லியன்ட் டியுட்டோரியல்சில் சேர்ந்து உழைத்தார். உடல் பலவீனங்களைச் சகித்துக் கொண்டே வழக்கம்போல் சகல பணிகளையும் செய்து கொண்டிருந்தார். தாங்கும் மட்டும் தாங்கிவிட்டு திடீரென்று ஒரு நாள் இரவு அவருடைய இதயம் நின்றுவிட்டது. அன்று தேதி 17 மார்ச் 1991. அவருக்கு வயது 73 நடந்து கொண்டிருந்தது. குடும்பத்துக்குக் கூடியவரை நல்லன செய்த திருப்தி அண்ணாவுக்கு இருந்தது. பெண்கள் எல்லோரையும் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெறச் செய்திருந்தார். அவர்கள் வேலை பார்க்கும் திறமையும் தகுதியும் பெற்றிருந்தார்கள். பையன்கள் இருவரும் மேல்நிலைப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார்கள் பெண்களில் ஒருவருக்கேனும் திருமணம் செய்து