பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


வெறுங்கற்பனைகளே. அவைகள் உண்மையானவைகள் அல்ல என்று ரூசோ எனும் பேரறிஞர் கூறுகின்ருர், கற்பனைத் துன்பங்கள் அனைத்தையும் காற்ருக ஊதி விடும் இயல்பு விளையாட்டுக்கு உன்டு. துன்பம் சேரா இளமைக் காலத்தின் துணையே இளைஞர்களுக்கு வேண்டும். அந்த இளமைக் காலத்தையும், விளையாட்டையும் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இளமைக் காலம் தான் பண்புகள் விளைவதற்கு ஏற்ற நலமான நஞ்சை நிலம் வளமான இனிமை நினைவுகளும் இன்பங்களும் சுரத்தற்கு ஏற்ற மணற்கேணி, இளமையே துன்பத்தின் தாக்குதல்களைத் தடுத்துக் காக்கும் படைக் கவசம். நிலத்தைப் பண்படுத்துவதும், மணற்கேணியைது ய்மை யாகப் பாது காத்திருப்பதும், படைக் கவசத்தைப் பக்குவ மாகப் பயன்படுத்துவதும் அதற்குரியவர்களின் அன்ரு டக் கடமையாகும். l அத்தகைய அற்புதக் 5 - মেইট LD50 LI விளையாட்டு நினை ஆட்டுகிறது. கடமையை ஒன்ருகப் புரிய கை நீட்டி அழைக்கிறது கடமையின் செழுமையை மிகுத்துக் கொள்ள முன்சென்று வழிகாட்டுகிறது. "உண்மை மனிதனுக்குச் சொந்தம். பிழை அவனது காலத்திற்குச் சொந்தம் என்கிருர் கதே எனும் மேல்நாட்டு அறிஞர், அதுபோலவே, விளையாட்டும் மனிதர்களுக்கு சொந்தம் பலவீனம் அதை மறுப்பவர்களுக்குச் சொந்தம் ஆகும். உண்மையை மறப்பதும் மறுப்பதும் உயர்வை விரும்பு பவர்களுக்கு உகந்த காரியம் அன்று. இளமையை நன்கு -