பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 திறமை யாரிடம் இருக்கிறது, அந்தத் திறமையை விதி களுக்கிணங்க, நேர்மையுடன் ஆடுகின்ருர்களா, ஈடுபடுகின் ருர்களா என்பதை நிர்ணயிக்க நடுவர் நிற்கிருர், இவ்வாறு நேர்மையை நிலை நாட்டும், திறமையை வெளிக் காட்டும் வழக்காடும் மன்றமாக (Court , ஆடுகளம் அமைந்து இருக்கிறது. <P,GJG GTSEN S Play Field, Ground GTGörgy G. sýl@ gylb அதற்கு Court என்றமற்ருெரு பெயரும் இருக்கிறது. இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் இப்பெயரும் ஏற்பட்டிருக்க வேண்டும். சந்தர்ப்பங்கள் தான் மனிதர்களே இனம் பிரித்துக் காட்டு கின்றன. சந்தர்ப்பத்திற்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருப்பவர்கள் சாதாரண மனிதர்கள். வந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் சந்தித்து தனக்கு சாதக மாக்கிக் கொள்கின்றவர்கள் அல்லது சந்திக்கத் திறமை யில்லாமல் தடுமாறுபவர்கள் இரண்டாம் நிலை மனிதர்கள். தனக்கு சாதகமாக சந்தர்ப்பங்களே உண்டு பண்ணி, தமது சக்தியையும் திறமையையும் காட்டி வெல்லும் ஆற்றல் நிறையப் பெற்றவர்களே வீரர்கள், விவேகிகள், வித் தகர்கள் என்று உலக மக்களே வகைப்படுத்திக் காட்டுவார்கள். அப்படி பல புதிய சந்தர்ப்பங்களே ஆடுகளம் உண்டு பண்ணுகிறது. புதுபுதுக் கருத்துக்களே உணர வைக்கின்றது. உணர்ந்த கருத்துக்களே நடைமுறை செயலுக்கு உகந்த வழியில் நடத்திச் செல்கின்றது. எதிர்த்து வரும் சந்தர்ப் பங்களுக்கு சில சமயங்களில் ஈடுகொடுக்க முடியாமற் போளு லும், எதிர்கொள்ளச் செய்யும் இதயத் துணிவை நல்குகிறது.