பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


வேண்டும். சேர்த்துவிடவேண்டும் என்பதே அவன் இலட்சியம். ஆழ்ந்த குறிக்கோளும் ஆகும். அதைப் போலவே, வாழ்க்கையின் குறிக்கோளும் அமைந்திருக்கிறது. வாழ்க்கையின் குறிக்கோள்தான் என் ? událġšést (Happiness). மகிழ்ச்சியெனும் சூரியனை நோக்கியே நமது வாழ் வெனும் மலர் விரிகிறது. அசைகிறது. திசை திரும்புகிறது. மலர் மலர்ந்து மணம் பரப்பும் போது, தென்றல்தான் வீச வேண்டும் குயில் பாடி, மயில் ஆடி, இனிய சூழ்நிலையே அமைய வேண்டும் என்பது இயற்கையின் நியதி அல்ல. புழுதிவாரி புயல் வீசும். புழுங்கச் செய்யும் கோடை எரிக்கும். ஆந்தை அலறும். அச்சம் நிறைந்த பல நிமித் தங் களும் தோன்றும். அதற்காக, ஒரு மொட்டு, தான் மலர் வதை நிறுத்திவிடாது. பொறுத்துப் பார்த்து பிறகு பூத்துக் கொள்ளலாம்’ என்று தேக்கம் கொண்டுவிடாது. வாழ்வின் குறிக்கோளே அடையும்போது, தடைகள் நேரலாம். நோய்கள் சாடலாம். கவலைகள் கூடலாம், பிரச் சினைகள் தலைவிரித்தாடலாம். அதற்காக, குறிக்கோளை மறக்கவோ, வேண்டாம் என்று மறுப்பதோ, தவிர்ப்பதோ தவரு கும். மகிழ்ச்சியே நமது குறிக்கோள் என்ற மனநிலை யினின்றும் சற்றேனும் சரிந்து விழுந்து விடக் கூடாது. 'மகிழ்ச்சி என்பது சாதாரணமாகக் கிடைத்து விடும் சரக்கு அல்ல. அப்படியென்ருல், மகிழ்ச்சி என்பதின்பொருள் என்ன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது, நாம் எந்நாளும் இதே சூழ்நிலையில், எந்தநேரத்திலும், எந்த வகையிலும் வெளியேற விரும்பாத ஒரு உயர்ந்த இன்பநிலைதான். அதாவது, மனம் திருப்தி