பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


கடவுளை நோக்கி நான் மகிழ்ச்சியோடு இருக்க. வேண்டும் என்று கேட்காதே! என்னை நானே நன்ருகப் பயன் படுத்திக் கொள்ள அருள்புரிய வேண்டும் என்றும் மட்டும் கேள். அதுவே, மகிழ்ச்சியை தானகவே விளைக்கும்’ என் கிருர் கெனன் மிட்செல் எனும் பாதிரியார். அப்படியென்ருல் அன்பு வழியாக, செயலின் விளைவாக எழுவதே உண்மையான மகிழ்ச்சியாகும் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

  • செல்வம் உள்ளவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ் பவர்கள் அல்லர். மகிழ்ச்சியாகவே உள்ளவர்கள்தான் செல்வர்கள்’ என்கிறது ஒரு சிங்களப் பழமொழி.
  • செல்வம் உள்ளவனே அதிகமாக மகிழ்ந்து வாழ்கிருன் என்று பலர் கொண்டிருக்கும் எண்ணம் தவறு. செல்வம் அதிகம் உள்ளவன் வாழ்க்கையில் உண்டாகும் அதிகமான இன்பங்களை இழக்கும் வாய்ப்பினை அடைகிருன். ஏனெனில் அவன் தனக்குள்ளே தனியணுக மாறுகிருன்’ என்கிரு.ர்கள். செல்வம் ஆனந்தத்தை அளிக்கிறது. ஆனல், மகிழ்ச்சியை

அல்ல. உண்மையான மகிழ்ச்சி ரேடியத்தைப் போன்றதாகும். அது அன்பு வடித்துடன், தன்னுடைய சக்தியின் அளவை விரிவுபடுத்திக் கொண்டே, இறுதியில் களிப்பை அளிப்பதே. եւսո (5ււ, இத்தகைய அரிய மகிழ்ச்சியை அடைய இரு வழிகள், உண்டு. ஒன்று உயர்ந்த நன்னேக்கு. மற்ருென்று பிறருக்காகப் புரியும் பணி. உயர்ந்த நன்னேக்கு இயற்கையின் பாற்பட்டது. இயல்பாக இயங்கும் இயற்கை அனனையின் ஒப்பற்ற எழிலே.