பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


யும், நிகழ்ச்சிக்கேற்றவாறு நெகிழ்ந்து நடந்திட வழி நடத்தும் வளமான மூளை. பல்வேறு உறுப்புக்களிலிருந்து பறந்து வருகின்ற செய்தி களைத் தெரிந்து கொண்டு ஆணையை விடுக்கும் மூளைக்கு அனுகூலமாகச் செயல்படும் நரம்பு மண்டலம். வாயிலிடும் உணவை வயிற்றுக்கு இட்டுச் செல்லும் உணவுக் குழாய், அதன் தொடர்பாகத் துணை நிற்கும் நுண்ணிய மூடிகள். வெளியுலகக் காற்றை மூக்கினல் இழுத்த பிறகு, நுரையீரலுக்குப் பத்திரமாகக் கொண்டு செல்லும் காற்றுக் குழாய்; குருதி தேங்கியுள்ள ஏரியாக இருந்து கொண்டு, உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்பிக் கொண்டு; துனய்மை யிழந்து தன்னகத்தே திரும்பி வருகின்ற அசுத்த இரத்தத்தை மீண்டும் பயனுள்ளதாக மாற்றிச் சிறப்பாக செயல்படும் இதயம்; தூய கனதிறைக் கொண்டு தூய்மையிழந்த இரத்தத்தை சேதப்படுத் தாது, தூய்மைக்கு உதவும் நுரையீரல்: உணவுக் குழாய் கொண்டு தந்த உணவுச் சுமையினைத் தாங்கி ஜீரண நீரை அதில் கலந்து குழம்பாக்கி, குடலறைக்குள் நேரம் பார்த்துத் தள்ளி வைக்கும் வயிறு: உணவிலே உள்ள நல்ல பொருளை ஈர்த்துக் கொண்டு அல்லனவற்றைத் தள்ளிவிடும் கல்லீரல்; உணவுக் குழம்பினை ஏற்று, உயிருக்கும் உடலுக்கும் உரம் அளிக்கின்ற உணவுச் சத்துக்களை ஏற்றுக் கொண்ட