பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நாகரீகத்தின் நாடகம் தேவை தான் செயலுக்கு முன்னேடியாகும் தேடிச் செல்ல வைக்கும் தூண்டு கோலாகும். தேவையால் தான் எண்ணங்கள் எழுச்சி பெறுகின்றன, கிளர்ச்சி அடை கின்றன. ஆனல் மனிதனைப் போல், மிருகங்கள் எண்ணுவதில்லை. உண்ணுவது, உறங்குவது என்பது தான் அவற்றின் தேவை களும் செயல்களுமாகும். அவற்றின் முக்கிய தேவை பசி யுணர்ச்சி தான். அதற்காக அவை இரை தேடுகின்றன. இரைக்காக அலைகின்றன. அதாவது தேடிச் சென்றே பெறு கின்றன. பசியென்னும் கிளர்ச்சி முடிந்ததும் ஒயவையும் உறக்கத்தையும் அணைத்துக் கொள்கின்றன. நேற்றைய தினம் கடந்து போனதே என்று நெகிழ்வதும் இல்லை. இன்று என்ன செய்வது என்று ஏங்குவதும் இல்லை. நாளை எப்படி என்று கவலைப்படுவதும் இல்லை. கிடைத்ததை உண்டு, திருப்தியடைகின்ற வாழ்க்கை மிருகங்களின் வாழ்க்கையாக இருக்கிறது.