பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது வாழ்க்கையாகும். வயது வந்த மனிதர்களுக்கு விளையாட்டானது பொழுது போக்கு. களைத்த உடலுக்கும், உள்ளத்திற்கும் களிப் பூட்டும் அழகுப் பூங்கா; முதியவர்களுக்குத் தெம்பூட்டும் சுவையான டானிக்! நோயிலிருந்து மீண்டவர்களுக்கு நலமான உடல் தரும் நல்ல நண்பன். விளையாட்டு யாரையும் வெறுத்ததும் கிடையாது. விட்டதும் கிடையாது. விரட்டியதும் கிடையாது. அதே சமயத்தில் தம்மை நம்பித் தொட்டவரைத் தாழ்த்தியதே இல்லை. விளையாட்டை முறையாகப் பின்பற்றி விளையாடிய வர்கள் வாழ்ந்ததாகக் கூறும் சான்றுகள் வரலாற்றில் நிறைய இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு ஜெஸி ஓவன்ஸ் எனும் அமெரிக்க வீரரைக் கூறலாம். செருப்புக்கு பாலிஷ் போடும் பையனுக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், ஜெகமே புகழும் வீரகை அல்லவா வாழ்ந்து மறைந்தார்! விளையாட்டில் ஈடுபட்டு முன்னேருதவர்கள் பற்றி ஒரு வார்த்தை. அவர்கள் விளையாட்டினை தங்கள் கீழான செய்கைகளுக்குக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட வர்கள். தாங்கள் செய்யும் தவருண செய்கைகளுக்கு விளையாட்டைப் பயன்படுத்திக் கொண்டதாலேயே வீழ்ந் தார்கள் என்பதே சரியான விளக்கம் ஆகும். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் வளையம் வந்து உதவி, அருள்பாலிக்கின்ற விளையாட்டை, உலகம் முழுவதும் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கின்ற விளையாட்டை, நாம் ஏன் விளையாடுகிருேம்? விளையாடுவது அவசியந்தான? மன அமைதிக்கு மட்டுமா நாம் விளையாடுகிருேம்? விளே யாடித்தான் திர வேண்டுமா என்ற வின நிலையின, விடாநிலையில் தான் நாம் இன்னும் இருக்கின்ருேம்.