பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

7


கூலி கிடைக்கும். வேலை அதிகமாகவும் கூலி குறைவாகவும் இருக்கிறதே என்று அவர் பார்க்கவில்லை. அதற்குப்பதில் தம்முடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

உருளைக்கிழங்கு வயலில் வேலை போன பிறகு அவர் பல தொழில்களைச் செய்திருக்கிறார். ஒவ்வொரு வேலையிலும் அவர் முழுக் கவனத்தையும் செலுத்தி, செய்யும் தொழிலைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டார். நாளடைவில் அவர் சொந்தமாகவே ஏதாவது தொழில் நடத்தவேண்டும் என்று எண்ணினார். அதன் காரணமாக அவர் ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனி என்ற ஒரு மோட்டார் எண்ணெய்க் கம்பெனியை ஏற்படுத்தினார். அவருடைய விடா முயற்சியாலும், அயராத உழைப்பாலும் அக்கம்பெனி சிறிது காலத்திலேயே மிகப் பெரியதாக ஆகியது. தற்காலம் அக்கம்பெனி உலகத்தின் எண்ணெய் ஏற்றுமதியையும், விலையையும் நிர்ணயிக்கக்கூடிய வகையில் வளர்ந்து உன்னதமான நிலைக்கு வந்து விட்டது.

ராக்பெல்லர், வாழ்க்கையில் தாம் வெற்றி பெற்றதற்குக் கடைப்பிடித்த முறையை அவரே கூறிருக்கிறார். அதை மற்றவர்களும் பின்பற்றி, எல்லோரும் அவரைப் போல் முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் எங்கு சென்றாலும் தாம் வெற்றி கொண்ட ரகசியத்தை பிரசாரம்செய்து கொண்டிருந்தார்.