பக்கம்:வாழ்க்கை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

95


செய்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு இந்த நன்மை பெருகுகிறது.

வாழ்க்கையின் முரண்பாடுகள் எல்லாவற்றையும் தீர்த்துவைக்கும் உணர்ச்சியை எல்லா மனிதர்களும் அறிவார்கள் ; அதுவே மனிதனுக்கு எல்லையற்ற நன்மையை அளிக்கின்றது ; அதுதான் அன்பு.

மிருக இயல்பு பகுத்தறிவு உணர்ச்சியின் விதிக்கு அடங்கித் தொழில் செய்வதே வாழ்க்கை. அன்பு செய்தலே அறிவுக்குப் பொருத்தமான மனிதனின் தொழில். மிருக இயல்பு தன் நலனை நாடும் பொழுது, அறிவு அதைத் தடுத்து, அன்பு நெறியைக் காட்டுகிறது. அன்பு நெறியில் மற்றவர்களோடு போராட வேண்டியதில்லை; மரணத்தைப் பற்றிய பயம் முதலியவையும் இல்லை.

நன்மையான பாதைக்கு ஏற்ற ஒரே திறவுகோல் இந்த அன்பு உணர்ச்சிதான். மனிதனுக்கு இந்த ஒரு வழிதான் உண்டு. அன்புணர்ச்சி மனிதனை மற்றவர்களுக்காக வாழும்படி செய்கிறது. இதனால் மிருக இயல்பு துன்பமடைவது இயற்கையே, இந்தத் துன்பமும் இதற்குரிய பரிகாரமும் அன்பின் விளைவுகள். மிருக இயல்பின் நன்மையையே இலட்சியமாகக் கொண்டால், ஒவ்வொரு கணத்திலும், நாம் மூச்சு விடுந்தோறும், மரணத்தை நோக்கியே செல்கிறோம். மரணம் ஏற்படுமே என்ற பயம் வாழ்வு முழுவதையுமே பாழாக்கித் தனி மனிதனின் இன்பங்களைச் சிதறச் செய்கிறது. ஆனால் அன்புணர்ச்சியோ மரணபயத்தை ஒழிக்கிறது. மனிதன் மற்றவர்களுக்காகத் தன் உடலையே தியாகம் செய்யவும் தூண்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/102&oldid=1122181" இலிருந்து மீள்விக்கப்பட்டது