பக்கம்:வாழ்க்கை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வாழ்க்கை


ஆனால், இன்பத் தேட்டம் வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்துகிறது ; துன்ப உணர்ச்சியைப் பெருக்குகிறது; மரணம் நெருங்கி வருவதை அதிகப் பயங்கரமாக்குகிறது. மரணம் நெருங்கி வருவதை மறைத்து வைத்துக்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது இன்பத்தை இடைவிடாது அதிகப்படுத்திக் கொண்டே வரவேண்டும். ஆனால், இன்பத்தின் பெருக்கம் தன் எல்லையை அடைந்ததும், தேங்கி நின்றுவிடுகிறது; மேலும் மேலும் பெருக்க முடியாத இன்பம் வேதனையாக மாறுகிறது. இந்த வேதனை உணர்ச்சியும் மரண பயமுமே அதிகரித்து வருகின்றன. நாம் ஒரு விஷமச் சக்கரத்துள் அகப்பட்டுக் கொள்கிறோம்; ஒன்று மற்றொன்றுக்குக் காரணமாகிறது. ஒன்று மற்றொன்றை வளர்க்கிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மனிதர் செல்வங்களை அநுபவித்து இன்பமடைய வேண்டும் என்று கருதுகின்றனர். இந்தச் செல்வங்களை எல்லா மக்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க முடியாது. எனவே, ஒருவர் மற்றவர்களிடத்திலிருந்து இவைகளைப் பறித்துக் கொள்ளவேண்டி யிருக்கிறது. பலாத்காரத்தாலும் கேடு செய்வதாலுமே இவைகளைப் பறிக்க முடியும். இந்த வழியில் பிறர் நலம் பேணுதல் அறவே ஒழிகிறது. அதிலிருந்து வளரக்கூடிய அன்பும் தோன்ற முடிவதில்லை. ஆகவே, இன்பங்கள் அன்புக்கு நேர் எதிரானவை. அவை பெருகப் பெருக, அன்பு குறையும்; அவை வலிமை பெற்று வளர்வதற்குத் தக்கபடி, அன்பு நலிந்து கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/117&oldid=1122200" இலிருந்து மீள்விக்கப்பட்டது