பக்கம்:வாழ்க்கை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

117


நான் உள்ள நிலையில் எனது உயிரைப்பற்றி எனக்கு உணர்ச்சி யிருக்கிறது. இந்த உயிருக்கு ஆரம்பமுமில்லை; அந்தமுமில்லை. நான் உயிரைப் பற்றிக் கொண்டுள்ள உணர்ச்சியுடன் காலமும் இடமும் சம்பந்தப்படவில்லை. ஆனால், காலத்திலும் இடத்திலும் என் உயிர் தோற்றமளிக்கிறது. ஆனால், நான் அறிந்துள்ள உயிர் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டது. உயிரைப் பற்றிய உணர்ச்சி மயக்கமானதன்று, காலத்திலும் இடத்திலும் தோற்றமளிக்கும் பொருளே மாயை. ஆகவே, காலத்திலும் இடத்திலும் உடல் வாழ்தல் தீர்ந்துபோவது, அதாவது மரணம் - உண்மையானதன்று. அது என் உண்மையான வாழ்க்கையைத் தடுத்து நிறுத்தவோ அதில் சலனங்களுண்டாக்கவோ முடியாது. இந்தக் கருத்துப்படி மரணம் இல்லை என்று ஏற்படுகிறது.’

மேலே கூறிய இரண்டு கருத்துக்களின் படியும் மரணத்தைப் பற்றிய பயமில்லை என்று ஏற்படுகிறது. முதல் கருத்துப்படி மரணம் சடப்பொருளில் ஒரு மாறுதல் தான். இரண்டாவது கருத்துப்படி உயிருக்குத் தோற்றமோ, அழிவோ இல்லை; அது நித்தியமானது. தோற்றமும் அழிவும் - சடப்பொருளான உடலுக்கே. எனவே, மனிதன் மிருக இயல்பைக் கருதினாலும், பகுத்தறிவு உணர்ச்சியைக் கருதினாலும், அவன் மரணத்திற்கு அஞ்சுவதற்கு இடமேயில்லை. மிருகத்திற்கு உயிர் இருப்பதான உணர்ச்சி கிடையாததால், அது மரணத்தைப் பார்ப்பதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் உயிரைப்பற்றிய உணர்ச்சி பெற்றிருப்பதால், மிருக உடல் மரிப்பது இயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/124&oldid=1123838" இலிருந்து மீள்விக்கப்பட்டது