பக்கம்:வாழ்க்கை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வாழ்க்கை


பதில் கூறுவேன்? ‘சிந்தனை செய்து உணரக்கூடிய தன்மையுள்ளவனே நான்' என்று பதிலுரைப்பேன். இதன் பொருள் என்ன? எனக்கு மட்டும் சிறப்பாகவுள்ள ஒரு முறையில் உலகத்தோடு சம்பந்தப்பட்டவன் நான். நான் எங்கு, எப்பொழுது தோன்றினேன் என்பதையும், எங்கு, எப்பொழுது சிந்திக்கத் தொடங்கினேன் என்பதையும் பற்றி எனக்கு நிச்சயமாக எதுவும் தெரியாது. நான் உயிரோடு இருக்கிறேன் என்பதையும், நான் இருக்கும் உலகத்தோடு எனக்குச் சம்பந்தமுண்டு என்பதையும் என் பிரக்ஞை எனக்குக் கூறுகிறது. என் பிறப்பு, வளர்ப்பு, இளமை, முதலியவைபற்றி எனக்கு அநேகமாக எதுவும் நினைவிலில்லை. வாழ்க்கையைப் பற்றி ஏதாவது நினைவுக்கு வந்தாலும், அது மற்றொருவருடைய வாழ்க்கையைப் பற்றி எண்ணுவது போலவே இருக்ககிறது. எனவே, எனது வாழ்க்கை முழுதிலும் ‘நான்’ என்பது ஒரே நானாக இருக்கவில்லை. என் உடல் எந்நேரத்திலும் மாறிக்கொண்டேயிருக்கிறது. உடல் முழுதும் ஒவ்வொரு பத்து வருட காலத்தில் பூரண மாற்றமடைகிறது. பழைய உறுப்புக்களில் எதுவும் இப்போதில்லை; தசை நார்கள், எலும்புகள், மூளை முதலிய யாவும் மாறிவிட்டன. இப்படிப் பூரணமாக மாறிவிட்ட உடலா ‘நான்?’ இந்த மாற்றங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே, தான் மட்டும் மாறாமலிருக்கும் ஒன்றுதான் ‘நான்.’ இதனால் தான் உடல் மாறி வரினும், சிறு வயது முதல் பல உடல்கள் ஏற்பட்டுவரினும், நான் ஒரே உடலைப் பெற்றிருப்பதாகக் காண முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/127&oldid=1122349" இலிருந்து மீள்விக்கப்பட்டது