பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 பதிப்புரை

உலக மக்கள் அனைவரும் வளமாக, நலமாக வாழ வேண்டும் என்று விரும்புவது இயல்பே. வாழ்வாங்கு வாழவும் மிக உயர்ந்த பிறப்பாகிய மனிதப்பிறப்பின் பயனை பெற்று மகிழ துறைகள் தோறும் உலக மக்கள் பண்பு நலன்களைப் பெற வேண்டும்.

உலக சமுதாயத்தின் மகிழ்வான வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டும் நூல் திருக்குறள்.

ஆன்மாவும், உடலும் போல, அகமும், புறமும் சேர்ந்ததே வாழ்க்கை. ஆன்ம வாழ்வை நெறிப்படுத்துவது ஆன்மிகம். அவ்வகையில் ஆன்மிகம், அறிவியல், அருளியல் முதலியவை இணைந்தும், பிணைந்தும் செயலாற்ற தவத்திரு. அடிகளார் அவர்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ திருக்குறள் நெறிமுறைகளை மிகத் தெளிவாக விளக்கி உணர்த்தும் நூலே "வாழ்க்கை நலம்"

இச்சிறந்த நூலினை அளித்தருளும் தவத்திரு அடிகளார் அவர்களுக்கு மக்கட் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

அணிந்துரை அளித்துள்ள டாக்டர் ம. பொ. சி அவர்கட்கும், 'வாழ்க்கை நலம்' எனும் இந்நூல் அனைவருக்கும் பயன்தர பெரிதும் உதவிய உழுவலன்பு நண்பர் கவிஞர் மரு. பரமகுரு அவர்கட்கும் என் மனமார்ந்த நன்றி.

இச்சிறந்த நூலை அனைவரும் படித்துப் பயன்பெற கலைவாணியின் திருஅருளை வேண்டுகிறேன்.

அன்புடன்,

சென்னை-17

'கலைவாணி' சீனி. திருநாவுக்கரசு

29-12–92.

பதிப்பாசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/7&oldid=1132987" இலிருந்து மீள்விக்கப்பட்டது