பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வாழ்க்கை நலம்

இதனால் புறம் பேசுதலில் ஒரு நன்மையும் இல்லை. தீமை மட்டுமே தரும்.

குற்றங்களையே எண்ணிப் பேசுதலால் காலப்போக்கில் குற்றங்கள் நம் மீதே சாரும் என்பதையும் அறிக !குற்றங்களைப் பொறுத்தாற்றும் உணர்வோடு ஏற்றுக்கொண்டு பழகும் அனுபவம் இருந்தால் குற்றங்கள் தொடரா.

நல்லனவற்றை நேரில் கூறுக. புறங்கூறுதல் அளவிறந்த தீமை தரும். அதனால் 'புன்மை' என்று ஏளனம் செய்யப் பெறுகிறது.

புறங்கூறும் பழக்கமுடையவர்களுக்கு மற்றவர்களின் குணங்களும் அருமைப்பாடும் தெரியாது, குற்றங்குறைகளையே காண்பர்; விமர்சிப்பர்; ஏசுவர்; பழிதூற்றுவர் இதனால் பகை வளரும். ஆதலால் புறங்கூறுதல் தீது. நன்மையை நோக்கிக்கூடப் புறங்கூறக் கூடாது.

       அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
       புன்மையாற் காணப் படும் (குறள்-185)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/90&oldid=1133217" இலிருந்து மீள்விக்கப்பட்டது