பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 எவனே என்ன? நாம் ஒவ்வொருவரும் தனியே இருந்து, நெஞ்சில் கைவைத்துப் பார்ப்போம். எத்துணை முறை, யார்மேலோ பாய்வதாக் எண்ணிக் சீறி, நம்மை நாமே நலிவுறச் செய்து கொள்கிருேம். தேவையா இது? நல்லதா இது? கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம் கொடுங்கோபம் பேரதிர்ச்சி-சிறியகோபம் ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும், அச்சத்தால் காடியெல்லாம் அவிந்துபோகும் தாபத்தால் நாடியெல்லாம் சிதைந்துபோகும் கவலையிருல் நாடியெல்லாம் தழலாய்வேகும் கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான் கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே" என்று பாரதியார் பாடுவது, நூற்றுக்கு நூறு உண்மை. 15 மனிதன் வளரப் பிறந்தவன்; முழு மனிதகை வளரப் பிறந்தவன். அப்படி வளராது, வெம்பி, வீழ்ந்து, வீணுவோர் எண்ணற்றவர். ஏன் அப்படி? "சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி என்பது அவர் கள் நெஞ்சில் பதியவில்லை. எதளுல்? பெரும்பாலோர் படித்தறியாதவர்கள். படித்த சிலருக்கும், படிப்பு, வாழ்க்கைக்கு இன்றியமையாத கருத்துக்களை ஊன்றவில்லை.