பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 உண்னும் சோறு தும்பை மலர்போல் இருக்கவேண் டும். அதற்காக, அரிசியை இரண்டு மூன்று முறை தேய்த்துக் கழுவுகிருேம். அப்புறம் தப்பித்தவறி, ஊட்டம் ஒட்டிக் கொண்டி ருக்கக்கூடாதே என்ற கவலேயால், சோற்றைப் பொங்கு வதற்குப் பதில், வடிக்கிருேம். அதனால் ஊட்டத்தை வடித்து நீக்கிவிடுகிருேம். வெறுஞ் சக்கையை வயிற்றில் திணித்துவிட்டு, நிறைவு கொள்ளுகிருேம். எனவே, நாம் தலைமுறைக்குத் தலைமுறை உடம்பால் இளைக்கிருேம்; குட்டையாகிருேம். "புலிநிகர் தமிழர் எலியாவதற்கு விரையலாமா?’ என்று கேட்டால், போட்டி போட்டுக்கொண்டு உணவைப் பாழாக்குகிருேம். 'அறுசுவை என்னும் பெயரால் எதை எதையோ அதில் கலக்கிருேம். ஊட்டத்தை உறிஞ்சிவிடச் செய்கி ருேம். எனவே, வலுவூட்ட வேண்டிய உணவு வலுவிழக்கச் செய்கிறது. இந்தியக் கல்வியின் நிலையும் அதுவே. கல்வி என்பது என்ன? எதற்காக அதைப் பெற அரும் பாடுபட வேண்டும்? எண்ணற்ற ஆற்றல்கள் ஒவ்வோர் மனிதரிடமும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. விதையை விதைத்துப் பயிராக்குவதால், ஒர் விதையிலிருந்து கையளவு நெல் மணிகளைப் பெறுகிருேம். அவ்விளைச்சலால் குடியானவருக்கு மட்டுமா நன்மை? இல்லை. இது சமுதாயத்தையே வாழ்விக்கிறது.