பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I27 ஈங்கொர் கன்னியை பன்னிரண் டாண்டனுள் எங்தை வந்து மணம்புரி வித்தனன் தீங்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன் செயலெதிர்க்கும் திறனில ளுயினேன் ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன் உளமெரித்துள தென்பதுங் கண்டிலேன். "மற்ருேர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன் மாத ராளிடைக் கொண்டதோர் காதல்தான் நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன் நினைவை யேஇம்மணத்திற் செலுத்திலேன் கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன் காதலொன்று கடமை யொன்ருயின’ என்று கவியரசர் பாரதியார் நெஞ்சம் குமுறுகிரு.ர். குழந்தை மணங்கள், சட்டத்திற்கு அஞ்சி, குறைந்து வருகின்றன. s எனினும், நெஞ்சிலே ஒருத்தி, பக்கத்திலே ஒருத்தி என்னும் பொய் வாழ்க்கைக்குத் தங்களைப் பலியிட்டுக் கொள்வோர் இன்றும் கோடி கோடி. இப் பொய்மையைப் பற்றி பாரதியார் கூறுவதைப் படிப்போம். "சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள் சகுனமந்திரங் தாலிமணியெலாம் யாத்தெ னக்கொலை செய்தனரல்லது யாது தர்ம முறையெனக் காட்டிலர். தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல் செய்து மற்றவை ஞான நெறியென்பர் மூத்தவர் வெறும் வேடத்தில் நிற்குங்கால் மூடப்பிள்ளை அறமெவண் ஒர்வதே"