பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சில குட்டிகள் போட்டது. தாய்ப் பூனேயின் நிறத்திலா குட்டிகள் பிறந்தன? இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வோர் நிறம். #ff ஒன்றைப் பார்த்தால் சாம்பல் நிறமாயிருந்தது. அடுத்ததோ கருஞ்சாந்தால் உருவானதுபோல் தோன் றிற்று. அடுத்ததற்கோ பாம்பின் நிறம். கடைக் குட்டி மட்டுமே பாலின் நிறத்திலிருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொர் இனமா? இவற்றில் எது தாழ்ந்த நிறம்? எது உயர்ந்த நிறம்? == நான்கும் ஒர் தாயின் குட்டிகள் நான்கும் ஒரே தரத்தவை. அவற்றிடை ஏற்றத்தாழ்வு பாராட்டுவதில்லை. அதைப் போல், மானிடர்களின் நிறவேறுபாட்டைக் காட்டி, அவர்களிடையே வேற்றுமை காட்டவேண்டாம். சாதி ஏற்றத்தாழ்வு பொய்யானது. "எல்லோரும் ஒன்று என்பது நடைமுறையானல், இன்பம் பெருக்கெடுத்து ஒடும். ஆகவே சாதி வேற்று மைகளை உடைத்தெறிவீர் என்று, ஆணையிடுகிருர் புரட்சிக் கவி சுப்பிரமணிய பாரதியார். "வண்ணங்கள் வேறறுமைப்பட்டால்-அதில் மானுடர் வேற்றுமை யில்லை எண்ணங்கள் செய்கைகளெல்லாம்-இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணிர்! "நிகரென்று கொட்டுமுரசே!-இந்த நீணிலம் வாழ்பவரெல்லாம்; தகரென்று கொட்டுமுரசே!-பொய்ம்மைச் சாதி வகுப்பினை யெல்லாம்.