பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&I விளக்கொளி மழுங்கிப் போக வெயிலொளி தோன்றும் மட்டும் களக்கமா ரிருளின் மூழ்குங் கனக மாளிகையு முண்டாம்; அளக் கருந்தீ துற்ருலும் அச்சமே யுளத்துக் கொள்ளார் துளக்கற ஓங்கி நிற்பர்: துயருண்டோ துணி வுள்ளோர்க்கே! என்று தனது பெல்ஜிய வாழ்த்தை முடிக்கிருர், அன்று அவர் பெல்ஜிய நாட்டிற்குக் கூறிய நம்பிக்கை, அடிமைப்பட்டுள்ள எல்லா நாடுகளுக்கும் ஊட்டும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை உணர்வு, மக்கள் உணர்வில், உயிரில் கலந்துவிட்டால், அப்புறம் எந்நாட்டவரும், போருக்குக் கோலம் பூண்டு புகுந்தவன் செருக்குக் காட்டை வேருக்கும் இடமில்லாமல் வெட்டுவோம் என்று... நிமிர்ந்து நிற்க இயலும். மக்கள் இன வரலாறு எத்தகையது? ஒர் கோணத்தில் நின்று பார்த்தால், அது கோழை களைப் போக்கிரிகள் அடிமைப்படுத்திய, கொடுமைப் படுத்திய, தொடர்கதையாகத் தோன்றும். அப்பாவி மக்களை, அறியாமையிலே ஆழ்த்தி வைத்து, நரிக்குணத்தார் கொக்கரித்த தீமையின் தொடர்பே யாகும். உலக வரலாற்றில், அநேகமாக எல்லா நாடுகளுமே, தடியெடுத்தவனுக்குக் கொடி பிடித்த கோழைகளைக் கொண்டிருந்தது.