பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வாழ்வியல் நெறிகள்

776), சக்கரவர்த்திகளென்றும் (தக்க. 457-உரை), அரசனாற் காளம் என்னும் விருது பெற்றமையால் காளக்கல்வியென்றும் (தக்க. 70-உரை; குறிப்பு), இரு மொழி நூல்களுள்ளும் இன்றியமையாதனவற்றைச் செவ்வனே அறிந்து அறிந்தவற்றை கன்கு புலப் படுத்திச் செய்யுள் செய்யும் திறம் வாய்த்திருந்தமை யின் சருவஞ்ளுகவி (தக்க. 443. உரை) என்றும் இவர் வழங்கப்படுவார்.

இவர் தேவியைப் பற்றிக் கூறுவனவெல்லாம் பெரும்பாலும் ‘யாமள சாத்திரக் கருத்துகளைப் பின்பற்றியவனவென்று தெரிவதால் இவருக்கு அங் நூல்களிற் பயிற்சியுண்டென்றும் சைன முதலிப பிற சமயங்களைப் பற்றிய செய்திகளையும் பரிபாகூைடி களையும் எடுத்தாளுதலின் அச்சமய நூல்கள் அறிந்த வரென்றும் சொல்லலாம்.

துர்க்காபரமேஸ்வரி 5E նԾ)ՅՆ)LT 55նԾ) GTT கோக்கி ஆளுடைய பிள்ளையார் கதையைச் சொல்லும்படி கட்டளையிட்டு, அங்ஙனமே சொல்லிய கலைமகளை மனமுவந்து தன் அருகில் வீற்றிருக்கும்படி அருளிச் செய்ததாகக் கூறியிருப்பதும், தக்கயாக சங்காரத்தைக் கூறும் ஏனைய நூல்களில் வீரபத்திரதேவர் கலை மகளுடைய காசியை அரிந்ததாகக் காணப்படும் செய்தியைக் கூறாதொழிந்ததும், வ ா ழ் த் தி ல், “ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே’ என்று பாராட்டியிருப்பதும் இவருக்குக் கலைமகள்பாலுள்ள பேரன்பைப் புலப்படுத்துகின்றன. இவர் அகத்தி பரிடத்து மிக்க ப க் தி யு ைட ய வ ர் என்பது 40, 233, 624-ஆம் தாழிசைகளால் விளக்கமாகின்றது.