பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Լաո ֆԼւհ &h, t.յha\)3, LiւՋյւճ னியன் 143

இம்மெய்யுணர்வே புலால் உண்ணாத பெரு நிலையை வேரூன்றச் செய்வதாகும்.

தன்னுான் பெருக்கற்குத் தான்பிறிது னுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்

என்று திருவள்ளுவப் பெருந்தகை கூறுமாறு போல, புலால் உண்ணல் அருளையும் அன்பையும் மீறிய செயலாகும். சைவ மரபின்படி இலங்கும் உயிர் அனைத்தும் ஈசன் கோயில்'களாகும். எனவே உயிர்க் கொலை, புலால் உண்ணல் ஆகியவற்றை மறுத்து, எல்லா உயிர்களிடத்தும் அன்பு, அருள் ஆகிய வற்றைப் பொழிவதே சைவ மரபாகும்.

தொண்டு

நான், எனது என்ற ஆணவங்களின் நீங்கிய தொண்டு சைவத்தில் பெரிதும் வற்புறுத்தப்படுகிறது. பெரியபுராணம் சைவ அடியார்களின் தன்னலங் கருதாப் பெருந்தொண்டை - சிவத்தொண்டை விரிவாக விளக்கிக் கூறுகிறது. பெரியபுராணத்தின் பாவிகமே தொண்டு’ என்று கூறினாலும் அது மிகையாகாது.

தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே

என்னும் அப்பர் வாக்கு, சமயத் தொண்டை கன்கு விளக்கி நிற்கும். கூறியவாறே உழவாரப்பணி, திருஞான சம்பந்தருக்குப் பல்லக்குத் துாக்கியது ஆகிய செயல்களைச் செய்தவர் அப்பர் பெருமான்.