பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வாழ்வியல் நெறிகள்

வடலூர் வள்ளற் பெருமானுடைய வாழ்வின் கொள்கையினை ஜீவகாருண் ணியம் அல்லது உயிரி ரக்கம்’ என்று ஒரு சொற்றொடரிற் கூறிவிடலாம். அவருடைய இரக்க உள்ளத்தினைப் பின்வரும் இரு பாடல்களும் உணர்த்தும் :

காணுறு பசுக்கள் கன்றுகளாதி

கதறிய போதெல்லாம் பயந்தேன்

ஏணுறு மாடுமுதல் பலமிருக

மிளைத்தவை கண்டுள மிளைத்தேன்

கோணுறு கோழிமுதற் பல பறவை

கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்

விணுறு கொடியர் கையிலே வாளை

விதிர்த்தல் கண்டென்னென வெகுண்டேன்.”

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

டிேய பிணியால் வருந்துகின்றாரென்

நேருறக் கண்டுளம் துடித்தேன்

ஈடில் மானிகளாய் ஏழைகளாய்

கெஞ்சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.”

  • தன்னுான் பெருக்கத்தான் பிறிதுரன் உண்பான்

எங்ஙனம் ஆளு அருள்.”

என்று திருவள்ளுவர் தன் உடல் பெருக்கத்திற்கு ஊன் உண்ணாத நிலையை வற்புறுத்திச் சொன்னார்.

பின்வந்த தாயுமான தயாபரர்!

கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவது என்இச்சை பராபரமே."