பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 வாழ்வியல் நெறிகள்

செவிக்கும் மனத்திற்கும் இனிமை பயந்து, ஆசிரியரின் உணர்ச்சிக்கு ஏற்பக் கற்பவரின் உள்ளத்திலும் உணர்ச்சி அலைகளை எழுப்புகின்றன; ஆனால் வலிந்து முயன்று அமைத்த எதுகையும் மோனையும் விழிப்புடன் படிப்பவர்க்கு அதற்கு மாறாக வெறுப்பை உண்டாக்கிவிடும்’ என்கிறார் டக்கர் எனும் அறிஞர்.: குமரகுருபரர், தம் பிரபந்தங்களில் இத்தொடை வகை *FA,6TJIGIT முயன்று முயன்று அமைத்தாரில்லை. புண்ணியத்தால் உடன் பிறந்த புலமையால், எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டியோ, தம் பிரபந்தங். களுக்கு நல்ல வடிவங்களை அமைத்திருக்கிறார் அவர்.

உத்தி பற்றிய கொள்கைகள்

கவிஞன், தன் பொருள் விளக்கத்திற்காகக் கையாளும் முறைகள் கவிதை உத்திகள் அல்லது இலக்கியம் என்று அழைக்கப்படும். இவை கு மர கு ரு பர ர் பிரபந்தங்களில் அமைந்துள்ள தன்மையைக் காண்போம்.

கற்பனை

கற்பனைச் சிறகு கொண்டு, கவிஞன் பறப்பதால்: சிறந்த கவிதை பிறக்கிறது. கற்பனைக் கண் கொண்டு கவிஞன், கடந்ததை, கிகழ்வதை, இனி கிகழப் போவதைக் கண்டு, கவிதையாக்குகிறான். உள்ளதை உள்ளவாறும், உள்ளம் விழைந்தவாறும் ஒரு பொருளைப் பற்றிப் பாடக் கவிஞனுக்குத் துணை செய்வது கற்பனையே ஆகும்.

%