பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 வாழ்வியல் நெறிகள்

ஒளிமிக்க முகத்துக்கு ஒப்பானவன் என்று இனிச் சொல்ல மாட்டேன். என்னை உயிரோடு விடுங்கள்” என்று மன்னிப்புக் கோருகிறான். உடனே அவர்கள் சந்திரனை விட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்ட வெறுங்கற்பனையை அமைத்துப் பாடியிருக்கிறார் குமரகுருபரர், முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழில்.க

இதுபோன்ற கற்பனைகள் ப ல வ ற் ைற இவருடைய பிற பிரபந்தங்களிலும் காணலாம்.

மீனாட்சியம்மை ஊசலாடும்போது அண்ட பகிரண்டமும் அசைந்ததாகக் கற்பனை செய்திருக் கிறார் கவிஞர். பாடல் பாடி அம்பிகை ஊசலாடுங்கால் அப்பாட்டைக் கேட்டும் ஊசலாட்டைக் கண்டும் சிவபெருமான் திருமுடியசைக்க, அத்திருமுடியிலுள்ள ஆதிசேடனும் அசைந்தான்; அதனால் பூமியசைந்தது; சராசரங்கள் யாவும் அசைந்தன எ ன் கி ற ா ர்

குமரகுருபரர்.”

சிவபெருமான் திருமுடியில் அணிந்த பிறையோடு, உமாதேவியார் திருமுடியிற்துடிய முத்தாலாகிய பிறை யென்னும் அணியும் சேர்ந்திருக்கும் தோற்றம், பூர்ணச் சந்திரனை ஒத்திருந்தது. அதை முழுமதி யென்றே கருதிச் செம்பாம்பாகிய கேது வந்து படம் விரித்து ஆடியது. முருகன், அக் கேதுப் பாம்பைத் தான் துடும் காந்தளென்று மயங்கி அதைப் பறிக்கச் சென்றான்; உடனே கேதுப்பாம்பு வெருண்டோடியது. முருகன் ஏமாற்றமடைந்தான்; சிவபெருமான் முடியில் உள்ள பிரமன் தலை, இயல்பாகவே ககும் இயல்பில் இருக்கும்; ஆனால் ஏமாற்றமடைந்து கிற்கும் முருகன் செயலை எண்ணியே அத்தலை நகுவதாக எண்ணிய முருகன், “என்னைப் பார்த்தா சிரிக்கின்றாய்? முன்பு