பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வாஷிங்டனில் திருமணம் | நல்லவேளையாக பனாரஸ் யாத்திரை தெருக்கோடியிலேயே நின்றுவிட்டது! ஆனால் அதற்குக் காரணம் என்ன என்பது அமெரிக்கர்களுக்குப் புரியவில்லை.

மாப்பிள்ளையிடம் சென்று, 'ஏன் திரும்பி விட்டீர்கள், பனாரஸ் போகவில்லையா?” என்று கேட்டனர்.

"இல்லை; பனாரஸில் வெயில் அதிகமாயிருக்கிறதாம். ஆகையால் அப்புறம்தான் போகப் போகிறார்' என்று பஞ்சுவே அவர்களுக்குப் பதில் கூறி அனுப்பிவிட்டான்.

பத்திரிகைக்காரர்கள் உடனே, "ப்ரைட்க்ரூம் கான்ஸ்ல்ஸ் ஹிஸ் பனாரஸ் டுர்!" "முகூரட் இஸ் டேக்கிங் ப்ளேஸ்!" என்று மறுபடியும் ஒரு செய்தியைப் பிரசுரித்தார்கள். அதைக் கண்ட பிறகு தான் அமெரிக்க மக்களின் கவலை நீங்கிற்று.

மாப்பிள்ளை சம்மர் ஹவுஸ் வாசலில் வந்து நின்றதும் பெண்டுகள் ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள்.

"நேரம் ஆகிறது; மாலை மாற்ற வேண்டாமா? மணப் பெண்ணைக் கூப்பிடுங்கோ" என்று இரைந்தார் அப்பு சாஸ்திரிகள்.

தஞ்சாவூரிலிருந்து ஸ்பெஷலாகக் கொண்டு வந்திருந்த மலர் மாலைகள் இரண்டையும் எடுத்துக் கொண்டு ஓடிவந்தான் பாப்ஜி.

இரண்டு மாமன்மார்களும் கச்சத்தை வரிந்து கட்டிக் கொண்டு, பெண்ணுக்கும், பிள்ளைக்கும் தோள் கொடுக்கத் தயாராக நின்றனர்.

மாலை மாற்றும் வேடிக்கையைக் காண, தெரு முழுதும், 'ஜே ஜே' என்று கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.