பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வாஷிங்டனில் திருமணம் | பிரஸ்காரர்கள் பெண்ணின் மாமாவிடம், 'தங்கள் பெயர் என்ன?' என்று விசாரித்தனர். 'ராமய்யர்' என்றார் அவர். அடுத்தாற் போல் பிள்ளையின் மாமாவை அணுகி, “யுவர் நேம் ப்ளீஸ்' என்று கேட்டனர். 'சாமாவய்யர்' என்றார் அவர். அவ்வளவுதான்; அவர்கள் பெயரை அங்கிள் ஸாம் அண்ட் ராம் என்று சுருக்கி 'தி மேரேஜ் டான்ஸ் ஆப் ஸாம் அண்ட் ராம்’ என்று பத்திரிகைகளில் போட்டோவுடன் செய்தியும் பிரசுரித்துவிட்டார்கள்! அடுத்தாற்போல் ஊஞ்சல் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. பெண்ணும், பிள்ளையும் ஊஞ்சலில் அமர்ந்ததும், உள்ளூர் நாதஸ்வரக்காரர் லாலியும் ஊஞ்சலும் பாட, ராக்ஃபெல்லர் மாமி உள்பட சுமங்கலிகள் ஏழெட்டுப்பேர் மஞ்சள் சிவப்பு நிற அன்னப் பிடிகளை எடுத்துக் கொண்டு ஊஞ்சலை வலமாக வந்து நாலு திசைகளிலும் உருட்டி விட்டனர். இரண்டு சுமங்கலிகள் குத்து விளக்கைப் பெரிய பெரிய வெள்ளி அடுக்குகளில் வைத்துப் புடவைத் தலைப்பால் மூடியபடி சுற்றி வந்தனர். இன்னும் இரண்டு பேர் செம்பில் தண்ணிரை நிரப்பிக் கொண்டு ஊஞ்சலைச் சுற்றிலும் ஊற்றிக் கொண்டே மெதுவாகச் சுற்றி வந்தனர். மஞ்சளும் சிவப்பும் வெள்ளையுமாக அன்னப் பிடிகளைக் கண்ட அமெரிக்க மக்கள், "ஹவ் டு தே மேக் தீஸ் கலர்ட் ரைஸ் பால்ஸ்?' என்று வியந்தனர்! மணப் பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அமெரிக்க மாதர்களில் பலர், புடவை அணிந்து, தென்னிந்திய சுமங்கலிகளைப்போலக் காட்சி அளித்தனர். ராக்ஃபெல்லர் மாமி மட்டும் அரை மணி E-**RY H }} நேரத்துக்கெல்லாம் புடவையை ty o . Kk • * - * 倣)*/Yハイ残 மாற்றிவிட்டு தனனுடைய Wilso --- § வழக்கமான டிரஸ் ஸை அணிந்து ="দু। 2 கொண்டுவிட்டாள். x