பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வாஷிங்டனில் திருமணம் | மிஸஸ் ராக்ஃபெல்லர் ஒரு பெருமூச்சு விட்டபடியே, "மை காட் தாலி கட்டி முடிந்தது. இப்போதுதான் எனக்கு நிம்மதி ஆயிற்று. செளத் இண்டியன் மேரேஜ் என்பது சாதாரண விஷயமில்லை. 'கல்யாணம் செய்து பார் என்று டமிலில் சொல்லுவாங்களே, நல்ல 'ப்ராவர்ப் அது என்றாள் தன் கணவரிடம். முகூர்த்தத்திற்கு வந்திருந்த பிரமுகர்களும், சீமாட்டிகளும் ஒவ்வொருவராக வந்து ராக்ஃபெல்லர் தம்பதியரிடம் விடை பெற்றுக் கொண்டனர். பாப்ஜியும், லல்லியும் வாசலில் நின்ற வண்ணம் வந்தவர் களுக்கெல்லாம் தாம்பூலமும், தேங்காயும் அடங்கிய பிளாஸ்டிக் பைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். 'மேடம்! இலை போடலாமா?' என்று கேட்டுக் கொண்டே வந்தான் பஞ்சு. 'ஒ எஸ். அமெரிக்கன் பிரண்ட்ஸ்-க்கெல்லாம் ஆஸ் யூஷ்வல் ஸ்பரேட் பந்திதான்' என்றாள் மிஸஸ் ராக். கல்யாண விருந்தை அமெரிக்க நண்பர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்கள். அன்றைய விருந்துக்குச் சுமார் ஐயாயிரம் அமெரிக்கர்கள் வந்திருந்தார்கள். விருந்தில் பரிமாறப்பட்ட ஜாங் கிரியையும், வடுமாங்காயையும் கையில் எடுத்து அதிசயத்துடன் திருப்பித் திருப்பிப். பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவை பெரும் புதிராக இருந்தன. ஒருவர் ஜாங்கிரியைக் கையில் எடுத்து, அதற்கு ஆரம்பம் எது, முடிவு எது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிலர், சிக்கலான ஜாங் கிரிப் பின்னலைப் பார்த்துவிட்டு, 'வெரி காம்ப்ளிகேடட் ஸ்வீட் என்றனர். ஆரம்பம் தெரிந்துவிட்டால் முடிவைக் கண்டுபிடித்து விடுவேன்' என்றார் ஒருவர். முடிவு தெரிந்துவிட்டால் நான் ஆரம்பத்தைக் கண்டுபிடித்து விடுவேன்' என்றார்