பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வாஷிங்டனில் திருமணம் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தட்சணை என்கிற பூரி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் டிப்ஸ் தரப்படுகிறது. இந்தியாவில் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்ப வர்களுக்கெல்லாம் பணம் தருகிறார்கள். இது கொஞ்சம் கண்டிக்கத் தக்கது. ஆனாலும் சப்பணம் போட்டு உட்காரும் கலையில் இந்தியர்கள் வல்லவர்களாயிருக்கிறார்கள். இவ்வளவு நேரமாக மணப் பந்தலில் உட்கார்ந்திருப்ப வர்கள், உடனே சாப்பாட்டுக்கும் அதே போஸில்தான் உட்காருகிறார்கள். இது எப்படித்தான் அவர்களால் முடிகிறதோ, தெரிய வில்லை. இப்படிச் சம்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு இரண்டு ரூபாயும் கொடுக்கலாம், இருநூறு டாலரும் கொடுக்க GN)sfLD. பந்தலில் கூடியிருப்பவர்கள் எந்நேரமும் 'சளசள' வென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் ஸ்திரீகள் புதுப் புடவைகளைக் கட்டிக் கொண்டு, குறுக்கும் நெடுக்கும் அலையும்போது உண்டாகும் சரக் சரக்' என்ற புடவைச் சத்தம் வேறு. இதனாலெல்லாம் மந்திர சத்தம் நம் காதில் சரியாக விழுவதில்லை. தாலி கட்டும்போது மணப்பெண் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து கொள்கிறாள். மணமகன், மனைவியாகப் போகிறவளின் எதிரில் நின்றுகொண்டு, அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். இவ்வளவு நேரம் செலவு செய்து திருமணம் செய்கிறவர்கள் தாலி கட்டிக் கொள்ளும் நேரத்தில் மணப்பெண் செளகரியமாக உட்கார்ந்து கொள்வதற்கு ஒரு சோபா செட் வாங்கிப் போட்டிருக்கலாம். - அட்சதை எனப்படும் ரைஸ் களை ரெட் பவுடரில் கலந்து அவ்வப்போது மணமக்கள் தலையில்