பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. சாவி தமிழறிந்தோருக்கெல்லாம் தெரிந்த பெயர் சாவி. (சா.விஸ்வநாதன்) வட ஆற்காடின் மாம்பாக்கம் கிராமத்து வைதீக பிராமணக் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் விசுவுக்குப் பிடித்தமானவை: கேழ்வரகுக் கூழ், மாட்டு வண்டி சாரத்தியம், தொழுவத்தில் நண்பர்களுடன் (நாடகக் கூத்து நடத்துவது. காலவெள்ளம் சிறுவயதிலேயே சென்னைப் பத்திரிகைத்துறையில் சேர்த்துவிட, அப்போதே நெருங்கிப் பழகவும், பயிலவும் கிடைத்தவர்கள்: கல்கி, வாசன், ராஜாஜி, காமராஜ், பெரியார், ஜி.டி.நாயுடு, ஆதித்தனார், எம்.ஜி.ஆர். என பல பிரபலங்கள். காந்தியுடனும் பழக்கம் கருணாநிதியுடனும் நெருக்கம் என்று தலைமுறை இடைவெளிகளைத் தாண்டி தடம் பதித்திருக்கும் இவரது சொந்த வாழ்வும் / பத்திரிகையுலக அநுபவங்களும் பன்முக சிறப்பு கொண்டவை. அவரின் பரமபக்தராயிருந்தும் காஞ்சி பரமாச்சார்யரிடம், நீங்கள் சொல்கிறபடி என் பத்திரிகையில் ரிலிஜன் பற்றியெல்லாம் எழுத முடியாது. மன்னிக்க வேண்டும் என்றவர்; எம்.ஜி.ஆர். ('சோ' பற்றி) எழுதிய பகுதிகளை பிரசுரிக்க மறுத்தவர்; தமிழ் எழுத்தாளர்களுக்கு சஞ்சிகைகளில் சன்மானத் தொகை உயர காரணமாயிருந்தவர்; இன்றைக்கு சென்னையில் ஒரு 'லேண்ட் மார்க் 'காக இருக்கும் பனகல் பார்க் மார்க்கெட் ஸ்தாபிதமாக காரணமானவர் என்று பட்டியலை நீட்டிப் போகலாம். 1942-இல் 'வெள்ளையனே வெளியேறு இயக்கத் தில் ஈடுபட்டு சிறை சென்ற அந்நாளிலிருந்து 2000-ஆம் ஆண்டின் இன்றுவரை அவரது சரிதம் தமிழ்ப் பத்திரிகை உலகில் ஓர் சகாப்தம்தான். - நர்மதா ராமலிங்கம்