பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uBgnr *$* 37

உதவும் கைபோலச் செருப்பை இழந்தவர்களுக்கு எப்படி உதவுவது என்று சிந்திப்பதாகத் தெரியவில்லை.

வாங்கி இரண்டு வாரம் கூட ஆகவில்லையே... புத்தம் புதுசு... சரியாகக்கூடப் போட்டு அனுபவிக்கவில்லையே . அது அனுமதிக்கவில்லையே... காலில் மாட்டும் போதெல்லாம் கடித்தது. கஷ்டப்படுத்தியது. இருந்தும் எவ்வளவு பெருமையாக அதை அணிந்து கொண்டு ஏறுபோல் பீடுநடை போட்டேன்.

இந்த ஆள் எடுக்கும்போது சும்மாவா இருந்திருக்கும். கடித்திருக்க வேண்டுமே... அவன் கத்தியிருக்க வேண்டுமே... என்னையே எவ்வளவு கடித்தது... சனியன், அந்நியன் கால் பட்டதும் வெட்கத்தில் பேசாமல் இருந்துவிட்டதோ? இருக்காது... அவன் கைகளில்தான் தூக்கியிருக்கவேண்டும். கூட்டத்தில் யாரும் கவனிக்க வில்லையோ... காலில் மாட்டுவதைக் கையில் எடுக்கிறானே என்று யாரும் சந்தேகப்படவில்லையோ? ஏதேனும் அரசியல் கட்சித் தொண்டனாக இருக்கப் போகிறான் என்று பயந்து சும்மா இருந்திருப்பார்களோ!

அவனைச் சொல்லிக் குற்றமில்லை. . . ஊராரைச் சொல்லியும் குற்றமில்லை . . . எல்லாம் என் தப்புத்தான். மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டவுடன் ஏன் கழற்றிப் போட்டுவிட்டு ஒட வேண்டும்! மணமேடைக்குச் செருப்புப் போட்டுக் கொண்டு போகக்கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன... எல்லாம் இந்தத் தமிழால் வந்த வினை. தமிழ் படித்தால் வாழ்த்தித்தான் ஆகவேண்டுமென்று சட்டம் போட்டிருக் கிறார்களா...! அப்படி ஒன்றும் அதிகமாகக் கூட முழங்கவில்லை. நகமும் சதையும் போல, வானும் நிலவும் போல’ என்று கையிருப்பில் உள்ள இரண்டு