பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 57

முழங்குவார்கள், ஊர்வலம் நடத்துவார்கள்; மாநாடு கூட்டுவார்கள்; மற்ற சாதிக்காரனைப் பாருங்கள் என்ற உதாரணம் காட்டுவார்கள். -

ஒரு சாதித் தலைவரைச் சந்தித்து உங்கள் சாதியில் எத்தனை ஏழைப் பையன்களுக்கு படிக்க உதவியிருக் கிறீர்கள் ... எத்தனை ஏழைப்பெண்களுக்கு வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்ய உதவியிருக்கிறீர்கள் என்று கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்ன பதில் வரும்.... 'முதலில் எங்களைப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கச் சொல்லுங்கள்; அதற்குப் பிறகு பாருங்கள் என்பார்கள். முன்னுக்கு வருவதற்கு அவர்கள் கண்டுபிடித்துள்ள ஒரே வழி பின்னுக்கு வருவது!

கலைவாணர் என்.எஸ்.கே. ஒருமுறை குதிரை வண்டிக்காரர்கள் மாநாட்டில் பேசும்போது 'உங்கள் மீதுதான் எனக்கு அதிக மரியாதை நீங்கள்தான் யாரையும் முன்னுக்கு வாங்க! முன்னுக்கு வாங்க என்று சொல்லுகிறீர்கள் என்று குறிப்பிட்டார். இப்போது ஒவ்வொரு சாதித் தலைவரும் பின்னுக்கு வாங்க! பின்னுக்கு வாங்க! என்கிறார்கள். பின்னுக்கு வந்தால் தான் அவர்கள் முன்னுக்கு வரமுடியுமாம். பதுங்கினால் தான் பாய முடியுமாம்!

"தமிழ்நாட்டில் என்றுமில்லாத அளவுக்கு இப்போது சாதிவெறிதலைதூக்கியிருக்கிறது. ஒவ்வொரு சாதியிலும் வலுத்தவர்கள் வாழ்கிறார்கள். எந்த ஒரு கோரிக்கைக்குப் பின்னாலும் ஒரு சுயநலக் கும்பலின் நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவரை ஏழைகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று என் நண்பர் ஒருவர் கவலைப் பட்டார். அவர் கவலை நியாயமானதே...