பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் & 72

புகழ்பெற்ற பிரெஞ்சு நாளேடு (Le Monde) வெளியிட்

டுள்ளது.

ஏகாதிபத்தியம் கருவிலே கூடத் தன் திருவிளை

யாடலை நடத்துகிறது என்று குறிப்பாய் உணர்த்தியுள்ளது.

உடற்கூறு சம்ப்ந்தப்பட்டவற்றை அறிவதற்கு குரங்கு, தவளை போன்ற விலங்கினங்களை அறுத்துக் கூறு போடும்போது மனிதன் மட்டும் விதிவிலக்கா? இன்சுலின் தயாரிக்கவோ, மருத்துவ ஆய்வுக்காகவோ சிசேரியன் முறையில் வயிற்றைக் கீறிக் கூறுபோட்டால்-கருவில் கத்தி வைத்தால் அதையும் ஒட்டு மொத்தமாக எதிர்க்கலாமா என்று விஞ்ஞான மனோபாவம் கொண்டவர்கள் கேட்கக்கூடும். -

மனிதர்கள் தங்கள் இரத்தத்தையே இரத்த வங்கிகளுக்கு விற்கிறார்கள். ஏன், சிறுநீரகங்களைக் கூட விற்பனைக்குத் தயார் வாங்குவார் உண்டோ என்று விளம்பரம் செய்கிறார்கள். இப்படி இன்னொரு உயிரை வாழ வைப்பதற்காக நம் உடலின் ஒவ்வோர் உறுப்பும் பயன்படலாம்.

ஆடவனின் ஓர் எலும்பை எடுத்துத்தானே ஆண்டவன் பெண்ணைப் படைத்தான் என்று பெருமை பேசும் நாம், மனித உடலின் எந்த உறுப்பும் அறிவியலுக்குப் பயன்படுவதைப்பற்றி மெத்தவும் மகிழலாம்.

அறிவியல் முன்னேற்றத்திற்காக, மக்கள் நல்வாழ்வுக் காக என்றால் நாம் இவ்வளவுதூரம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை... பணம் கிடைக்கிறதா, பிணம் என்றாலும் அறுத்துக்கூறுபோடத் தயார் என்று